பக்கங்கள்

வியாழன், 16 செப்டம்பர், 2010

ஆல்பம் டிசைன் செய்யும் தளம் ஒரு அறிமுகம்

நான் இதுவரை பதிவிட்ட சிறந்த சாப்ட்வேரில் இதுவும் சேரும் என எண்ணுகின்றேன். இதை உபயோகிக்கும் போதே இதன் அருமை தெரிகின்றது.போட்டோ ஸ்டுடியோ வைத்திருக்கும் நண்பர்கள் ஒருதிருமண ஆல்பம் டிசைன் செய்ய எவ்வளவு நேரம் செலவிடுகின்றார்கள் தெரியுமா...? ஆனால் இந்த சாப்ட்வேர் நேரத்தை பெருமளவு குறைத்து நமக்கு வேலையை சுலபமாக்கி விடுகின்றது.இதனை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.உங்கள் கம்யூட்டரில் இதை இன்ஸ்டால் செய்து ஓப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் மேல்புறம் கீழ்கண்ட வாறு இருக்கும்.
இதில் முதலில் உள்ள New (பச்சை நிற பெட்டி)கிளிக் செய்து உங்கள் கம்யூட்டரில் உள்ள புகைப்படத்தை தேர்ந்தேடுங்கள். இப்போது உங்களுக்கு கீழ்கண்டவாறு விண்டோ வரும்.
இதில் வலதுபுறம் உங்களுக்கு Girl.Baby.Love,Simulation,Dream,Magazine,Cloth,Frame & Other என கீழ்கண் டபெட்டிகள் இருக்கும் .இதில் தேவையானதை கிளிக் செய்யுங்கள்.
ஒவ்வொரு வகையிலும் குறைந்தது 30 டிசைன்கள் உள்ளது. உங்களுக்கு தேவையான டிசைன் மீது கர்சரால் கிளிக் செய்து டிசைனை தேர்வு செய்யுங்கள்.,இப்போழுது உங்களுக்கு கீழ்கண்டவாறு விண்டோ தோன்றும்.
இத்துடன் ஒரு சிறிய விண்டோவும் தோன்றும். கீழே உள்ள படத்தை பாருங்கள்.
ஒரு ஆல்பத்தில் மூன்று விண்டோகள் இருப்பதாக வைத்துக்கொள்ளுவோம்.நாம் ஒவ்வோரு விண்டோவிற்கும் வெவ்வேறு படங்களை வைததுக்கொள்ளலாம்.மீண்டும் கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இதில் வெவ்வேறு படங்களான குருவி,பாலம்,அல்லி மலர் இணைத்துள்ளேன்.அதுபோல நீங்கள் எந்த விண்டோவில் படத்தை வைக்க விரும்புகின்றீர்களோ அந்த விண்டோவினை கிளிக் செய்யுங்கள். இப்போது மீண்டும் சின்ன விண்டோவினை பாருங்கள்.அதிலும் உள்ள பச்சை பெட்டி(New)கிளிக் செய்து உங்களுக்கு தேவையான புகைப்படத்தை தேர்வு செய்யுங்கள்.படத்தின் ப்ரிவியு பாருங்கள். விண்டோவில் படம் நடுவில் இல்லாமல் சற்று முன்னும் பின்னுமாக உள்ளதா..? இப்போது மீண்டும் சின்ன விண்டோவில் உள்ள சிகப்பு கட்டத்தை நகர்ததுங்கள். இப்போது விண்டோவில் படம் நடுவில் வந்துவிடும்.இப்போது நியு (பச்சை பெட்டிக்கு)க்கு அடுத்து மூன்று பொம்மை படங்கள். இருக்கும். இது எதற்கு பயன் படுகின்றது என்றால் நாம் புகைப்படத்தை கருப்பு வெள்ளையாகவோ - பழைய காலத்து போட்டோவாகவோ - பென் சில புகைப்படமாகவோ மாற்றிக் கொள்ளலாம்.ஒவ்வொரு பொம்மைபடத்திற்கும் ஒவ்வோரு டிசைன் உருவாகும்.கீழே உள்ள புகைப்படத்தை பாருங்கள்.
வெவ்வேறு டிசைனில்செய்த புகைப்படங்கள் கீழே:-






சரி ...ஆல்பம் தயார் செய்துவிட்டோம். இப்போது இதில் மொத்தமாக மாற்றவேண்டும்.மாறுதல்கள் செய்யவேண்டும்.மீண்டும் மேலே வாருங்கள்.கீழ்கண்ட விண்டோவினில் தேவையான மாற்றங்கள் செய்துகொள்ளுங்கள்.
படத்தை சேமிப்பதோ - கலர் மாற்றுவதோ - அ ளவுகளை மாற்றம் செய்வதோ - எதுவேண்டுமானாலும் செய்து இறுதியில் சேமித்துக்கொள்ளுங்கள்.பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.ஒருமுறை பதிவினை படித்துப்பாருங்கள். பின்னர் இந்த சாப்ட்வேரை உபயோகித்துப்பாருங்கள். சந்தேகம் வரும் பட்சத்தில் மீண்டும் இந்த பதிவினை படியுங்கள்.அப்படியும் உங்களுக்கு சந்தேகம் வந்தால் கருத்துரையில் கேளுங்கள்.பதில் அளிக்கி்ன்றேன்.

நன்றி
வேலன் அண்ணா

வெள்ளி, 10 செப்டம்பர், 2010

தேர் உற்சவம் -இருபத்திமூன்றாம் திருவிழா


பாகம் ஒன்று


பாகம் இரண்டு


பாகம் மூன்று
நல்லூர் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா நேற்று செவ்வாய்க்கிழமை காலை பக்திபூர்வமாக நடைபெற்றது. நேற்று அதிகாலை விசேட கொடித்தம்பப் பூசை கள் இடம்பெற்றமையை அடுத்து 6.30 மணிக்கு வசந்த மண்டபப் பூசை நடைபெற்றது. பின்னர் முரு கப் பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராக வரலாறு காணாத பக்தர் வெள்ளத்தில் தேர் ஏறி பவனி வந்தான் நல்லூர்க் கந்தன்

நல்லூர் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா நேற்று செவ்வாய்க்கிழமை காலை பக்திபூர்வமாக நடைபெற்றது.
நேற்று அதிகாலை விசேட கொடித்தம்பப் பூசை கள் இடம்பெற்றமையை அடுத்து 6.30 மணிக்கு வசந்த மண்டபப் பூசை நடைபெற்றது. பின்னர் முரு கப் பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராகத் தேருக்கு எழுந்தருளினார். அதைத் தொடர்ந்து பக்தர்களின் அரோஹரா கோஷம் ஒலிக்க காலை 7.15 மணிக்கு தேருலா ஆரம்பமானது.
கடந்த காலங்களை விட மிகக் கூடுதலான மக்கள் இம்முறை தேர்த்திருவிழவில் கலந்துகொண்டனர். ஏறக்குறைய ஒரு லட்சம் பேர்வரை நேற்றைய உற்சவத்தில் கலந்துகொண்டனர் எனத் தெரிகின்றது.
எனினும், வழமையான உற்சவ தினங்களில் கலந்துகொண்ட அளவுக்கு இம்முறை தேரின்போது மிகவும் கூடுதலான தென்பகுதி மக்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டபோதும் நேற்றைய தேர்த்திருவிழாவின்போது மிகவும் குறைந்த மக்களே தென்பகுதியில் இருந்து கலந்துகொண்டனர். புலம் பெயர்ந்த நாடுகளைச் சேர்ந்த தமிழ் மக்களையும் காணக்கூடியதாக இருந்தது.
பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டமையால் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் தொண்டர்களும் சுறுசுறுப்பாக இயங்கியதையும் அவதானிக்கக்கூடியதாக இருந்தது.
தொலைக்காட்சிகளின் நேரடி அஞ்சல் நிகழ்வுகளும் இடம்பெற்றன. சுகாதாரம் , குடிதண்ணீர் வசதிகள் மாநகரசபையால் கண்காணிக்கப்பட்டதுடன் மாநகரசபை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் கண்காணிப்புக்கு உணவகங்களும் உட்படுத்தப்பட்டன.
தூக்குக்காவடி, காவடி மற்றும் அங்கப் பிரதிஷ்டை, அடியளித்தல் ஆகிய நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவதில் பக்தர்கள் அக்கறை கொண்டிருந்தனர். தேர் இருப்புக்கு வந்ததை அடுத்து பறவைக்காவடிகள் வந்தவண்ணம் இருந்தன

இருபத்திநான்காம் திருநாளில் சந்திப்போம்

புதன், 8 செப்டம்பர், 2010

இருபத்திரண்டாம் திருநாள் - சப்பறத்திருவிழா

இன்றைய சப்பரத்திருவிளாவிலும் தொடர்ந்து நடைபெற்ற தேர் மகொட்சவத்திலும் எனக்கும் கலந்து கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்தபடியால் பெரிதாக ஒன்றும் வழங்க முடியவில்லை . சப்பறத்திருவிளாவில் என்னால் எடுக்கப்பட்ட நிகழ்வின் ஒருசில நிமிட நிகழ்வின் தொகுப்பை வழங்கலாம் என்று உள்ளேன் .







இருபத்து மூன்றாம் நாளில் சந்திப்போம்

சனி, 4 செப்டம்பர், 2010

இருபத்தொராம் திருவிழா - வள்ளி திருமணம் -பகுதி -8


இன்றுடன் இந்த வள்ளி திருமணம் வில்லுப்பாட்டின் நிறைவுப் பகுதிக்கு வந்துள்ளோம் இன்று வரை என்னுடன் இந்த தொகுப்பில் ஒன்றினைந்த சகல உள்ளங்களுக்கும் நன்றி தெரிவிப்பதோடு இந்த தொகுப்பினை தந்து நல்கிய யூ டியுப் இணையத்துக்கும் அதனை தொகுத்தளித்த மீண்டும் எனது இந்த பகுதியில் இடம்பெறச்செய்த முன்னாள் தொகுப்பாளருக்கும் நன்றியுடனும் மேலும் இந்த வில்லுப்பாட்டின் நாயகன் ஐயா சோம காந்தா அவர்களுக்கும் அவர்தம் குழுவினருக்கும் இந்த நாள் வரை இதனை கண்டு களித்த ஒவ்வொரு நல்ல உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்து எல்லா மக்களுக்கும் நல்லூர் கந்தனின் திருவருள் கிடைக்க வேண்டும் நாட்டில் இனியாவது சாந்தி சமாதனம் தொடர்ந்து நிலைப்பதொடு மீண்டும் இப்படிப்பட்ட நிகழ்வுகள் மருவி விடாமல் தொடர்ந்தும் இந்த ஈழ தேசத்தில் இதுபோன்ற கலைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இதுபோன்ற கலைகளை அழியாமல் பாதுகாப்பது ஒவ்வொருவருடைய கடமை என்ற முறையில் எல்லோரும் இணைந்து இதனை ஒரு கடமை என்ற வடிவில் செயல்படுவோமாக .
நன்றியுடன்
தயா
இருபத்திரண்டாம்
திருநாளில் சந்திப்போம்

வெள்ளி, 3 செப்டம்பர், 2010

நல்லூர் மஞ்சம் -இருபதாம் திருவிழா - வள்ளி திருமணம் - பகுதி -7




கந்தன் மஞ்சக் கந்தனை நாம் தொழுதிட
அஞ்சாது பகைவரை எதிகொள்வோம் . பஞ்சென பகைவன் ஓடிச்சென்று முருகா எம்மை காப்பாற்று நாம் செய்த பிழையை பொறுத்திடு என்று தஞ்சம் கொள்வதை காண்பாய் தமிழா - திரு மஞ்சம் ஏறிடும் கந்தனை நம் நெஞ்சம் நிறைய தொழுதிடுவோம் .

இருபத்தொராம் நாளில் சந்திப்போம்