பக்கங்கள்

புதன், 25 மே, 2011

என் பார்வையில் மரங்களில் வர்ணக் கோலங்கள்


மரங்களினால் வடிவமைக்கப்பட்ட சிற்பங்கள்(படங்கள் இணைப்பு) மரங்களில் வடிவமைக்கபட்ட சிற்பங்களின் அழகையும் வடிவமைப்பை நீங்களும் பாருங்கள்.

ஞாயிறு, 8 மே, 2011

என் பார்வையில் அன்னையர் தினம்ன்னையாய் தன் உருவம் எடுத்து
ராரோ சொல்லி எமை வளர்த்து -உளம் குளிர்ந்து தன்
ரு தோலில் கை தாங்கி எமை சுமந்து
நாட்டின் பெருமைகளை கதைகளாய் கோர்த்து எமக்கு
வகை கொண்டு எம்மை வளர்த்து எடுத்த தாயவளை
ராரும் உலகோரும் கைகொட்டி சிரிக்கும் படி - தனிமரமாய் தவிக்கவிட்டு
ல்லோர் முன்னாலும் தாய் மீது பாசமென நாடகமும் ஆடிவிட்டு
ளனமாய் நடக்கும் கூட்டம் தான் குத்தாட்டம் இங்கு போடுகுதாம் - இதை
ங்கரா நீ சொல்லு எப்போது மாறும் இந்த மானிடனின் ஆட்டம்
ருநாள் நீயும் தாய் மனதில் இடம் கொண்டாய் மாம்பழமும் வாங்கிக் கொண்டாய்
ர் வார்த்தை சொல்லிவிடு கலியுகம் வாழும் மானிடர்க்கு தாயினை நீ ஒருநாளில் நேசிப்பதா அன்னையர் தினம் - உனக்கு அவையெல்லாம் வெறும் நகைச்சுவை போல் உனக்கு நாள் பார்த்து தாய் மீது பாசம் கொள்ள இதுவெல்லாம் நீ விரும்பும் ஒரு பொருள் அல்ல , உன்னை பாரினிலே புதுப் பிறவியாய் உருவம் கொடுத்த தெய்வமாய் தினம் போற்று அதுவே நீ உன் தாய்க்கு செய்யும் உண்மை அன்பு

செவ்வாய், 8 மார்ச், 2011

என் பார்வையில் பெண்கள் தினம்


ஒரு தாயின் கருவில் பெண் உரு கொண்டு வளர் நடைபோட்டு
மீண்டும் தாயாய் புணர் ஜென்மம் எடுத்து தன் வடிவத்தை
மறு ஓவியம் வரைந்தது போல தானும் ஒரு பெண் மகவை
தலைமுறை தலைமுறையாய் தாய் உருவம் கொள்வாள்

எனக்குள் பெண் என்பவளை பொன்னாய் மதித்திட வேண்டும்
புதுப் பண்போட்டு புது ராகம் இசைத்திட வேண்டும்
கால் படும் மண்ணாய் மதித்திடல் வேண்டாம் - அவள் மனம்
புண்ணாய் மாறிட செய்திடல் வேண்டாம் .

புரட்சி கண்ட பாரதியின் புரட்சி பெண்ணாக அவள் மாற
புரட்சி செய்து அவளை உயர்த்திட வேண்டும் -தினம்
வறட்டு மனதுடன் நான் தான் என்று குருட்டு பார்வை வேண்டாம்
சிட்டு குருவியாய் அவள் சுதந்திரத்தை மாற்றிடுவோம் .

அடுப்படியில் பெண்கள் எல்லாம் இருந்த நாட்கள் மாறி
அரசியல்படியில் பெண்கள் விரைந்து ஏறிடச் செய்வோம்
ஆண் தான் எல்லாம் என்ற ஒரு நிலையை மாற்றி
சமநிலையை பேண சரிநிகர் எனும் கோசம் கொள்வோம்


தயா

திங்கள், 14 பிப்ரவரி, 2011

என்பார்வையில் காதலர் தினம்இருமனம் சேர துடிக்கிறது இதுவே திருமணமாம் பலர் வாழ்வில்
இருமனங்கள் சேராது துடிக்கிறதாம் வெறுமனமாய் .............
இரு
உள்ளங்கள் புரியாது காதல் செய்து புரியாத உறவு கொண்டு
காதலர் தினம் அன்றே பிரிவது தான் இன்றைய காதலர் தினமாம்

லைலா
மஜ்னு ,சாஜஹான் மும்தாஜ் ,கண்ணகி கோவலன் இவர்கள்
அன்றைய காதலர்கள்... நிஜமான ஜோடிகள்...
இவர்கள்
கொண்டாட வில்லை காதலர் தினம்
ஏனென்றால் அவர்களின் இதயம் தம்முள்ளே புரிதல் கொண்டது ..
உண்மை
காதலை உதட்டிலே காண்பதா ? இல்லை
உள்
இதயத்தில்
காண வேண்டும் - அன்று அவர்கள்
கண்டார்கள்
காதலின்
புனிதம் நிலைத்து கொண்டது
இன்று இவர்கள் காண்பது இருட்டிலே காமம் கொண்டதாய் காதலர் தினம்

முதல்
சந்திப்பில் தான் இன்றைய காதலர்க்கு.,
அவர்கள் காதல் வாழ்வின் முடிவு வரை .....

! இளைய சமுதாயமே உன் வாழ்விலும் காதல் வேணுமா ?

செய்வோம்
காதல் பெண் மீது அல்ல ,
உன்னை படைத்த தாயின்மீது
அல்லது
தந்தை மீது,

இல்லையேல்
உன் சமூகம் மீது ,

கருகி
சோபை இழந்து நீ காணும் உன் தேசம் மீது ,

தெருவில்
பிச்சை எடுக்கும்
ஒன்றும் இல்லாத உன் போன்ற ஜீவன் மீது காதலித்து பார் ,,
உண்மை
காதல் எதுவென்று அன்றே உன்னில் புரியும்..


அடுத்த
தெரு சரோஜாவுக்கு உனது தாய் தந்தையின்
பணத்தை
செலவு செய்வதை விட்டுவிட்டு உன்
சம்பாத்தியத்தில்
ஒரு பைசாவாவது செலவளித்துப்பார் !
உன் உழைப்பின் வியர்வை துளிகள் தெரியும்!!

அந்த
பணத்தில் உன் தாய்க்கு ஒரு கர்ச்சிப்பாவது கொடுத்துப்பார் !
உன் மீது தாய் காதல் கொள்வாள் !!

தமிழனாய் பிறந்த நமக்கு ஆங்கில காதல் வேண்டாம்
காதலர் தினமும் வேண்டாம் அன்றைய நாளை
ஒரு
கல்லறை நாளாய் கொள்வோம் ஏனெனில்
காதல்கள் எல்லாம் அங்கே தான்
உறக்கம் கொள்கிறது

காதல்
கொள்வோம் காதல் கொள்வோம்

காமம்
கொள்ளோம் காமம் கொள்ளோம்

இன்றைய
நாளில் இருந்து உன்னுள் மாற்றம் கொள்

நாளைய
பொழுது உன்மீது காதல் கொள்ளும் ............வியாழன், 10 பிப்ரவரி, 2011

என் தேசம் , என் தந்தை , என் தாய்
என் சகோதரர் , என் சொந்தம் , என் சுற்றம் - எல்லாமே
அன்று என் வாழ்வில் வசந்தம்

குருதி தோய்ந்த தேசத்தில் வாழ்ந்த எனக்கு
குளிர் உறையும் தேசத்தில் வாழும் போதுநடுக்கம்
ஆனாலும் என் தேசம் எனக்கென்றும் நேசம்

அன்றைய பொழுதையும் இன்றைய பொழுதையும்
நினைக்கும் போது மனதினில் என்றும் இறுக்கம்
உறக்கம் தொலைத்து உடல் வலித்து உயிராகிய
என் தேசத்தை தொலைத்து தேடுவதாய்
எனக்குள் ஒரு சோகம் ,,,,,

உரிமைக்காய் போராடுகின்றோம் என்று
சொன்னவர் எல்லாம் தமது
உரிமையையும் இழந்து பிறர் உரிமையையும்
பறித்து கொடுத்ததுவாய் இன்றைய நம் வாழ்வு ...,

உரிமையின் பெயரால் எல்லாவற்றையும் இழந்தோம்
என் வாழ்விலும் மூ பத்துடன் இரு ஆண்டுகள் இதுதான்
இனிவரும் அகவையில் அக மகிழ்வேன் என்றபடி
பிற தேசம் வாழும் என் தேச நேசத்தவைளை
கரம் பிடித்த ஓராண்டுடன் ஓடோடி அவள் கரம் பற்ற
ஆகாயப்பருந்தில் ஆனந்தமாய் பயணப்பட்டேன் ...

என்னை வழி அனுப்பிடவே என் உடன் பிறந்தவள் தன் மகனோடும்
சோதரன் தன் குடும்பமுமாய் வந்தென்னை விமான புரியிலே
நா தள தளக்க பேசாமடந்தை போலும் விழி இரண்டில்
முத்து துளிகளை சிந்தியபடி என் மாமா தான் ப்ளேன் ஏறி
தனக்கு ஒரு ப்ளேன் வாங்கி வருவார் என்ற நம்பிக்கையுடன்
கன்னத்திலே முத்தமிட்டு கைகாட்டி விழியோரம் பார்த்து நிற்க
கூடவந்த சுற்றங்களும் என் வாழ்வு சிறக்கும்படி அகமகிழ்ந்து
வழி அனுப்பி வைத்தனராம் - தம் விழி கரைத்து

லங்கா விமானத்திலே இருந்து இழந்த என் மனதை
இழைத்து இழைத்து தேடுகின்றேன் ...,
இலங்காபுரியை விட்டு இமயபுரியின் மேலாய்
இடம் தேடி அலைபவன் போல் இடரோடு என்பயணம் ..

மேலே பறக்க பறக்க என் இதயம் கீழ்
நோக்கியதாய் துடி துடித்தது
ஒருநாளில் என்பயணம் மறுதேசம் கண்டது
இடை இடையே என் உள்ளத்தில் etppadda காய கீறல்களும்
உள்ளத்தின் வடுக்களும் கண்நீரைப்போலதுமாய்
நதி மலை பள்ளத்தாக்குகளும் மாறி மாறி பூமிப்பந்தின்
வர்ண ஜாலங்களும் என் விழி விம்பத்தில் கருக்கொண்டது ..

மெது மெதுவாய் ஆகாயப்பேருந்து இரைதேடிய
பருந்தினை போல அசைந்தாடி இலண்டன் மாநகரின்
அழகினை அணைத்தபடி கீட்ருவை நோக்கி முத்தமிட்டது

தொடரும்