பக்கங்கள்

செவ்வாய், 8 மார்ச், 2011

என் பார்வையில் பெண்கள் தினம்


ஒரு தாயின் கருவில் பெண் உரு கொண்டு வளர் நடைபோட்டு
மீண்டும் தாயாய் புணர் ஜென்மம் எடுத்து தன் வடிவத்தை
மறு ஓவியம் வரைந்தது போல தானும் ஒரு பெண் மகவை
தலைமுறை தலைமுறையாய் தாய் உருவம் கொள்வாள்

எனக்குள் பெண் என்பவளை பொன்னாய் மதித்திட வேண்டும்
புதுப் பண்போட்டு புது ராகம் இசைத்திட வேண்டும்
கால் படும் மண்ணாய் மதித்திடல் வேண்டாம் - அவள் மனம்
புண்ணாய் மாறிட செய்திடல் வேண்டாம் .

புரட்சி கண்ட பாரதியின் புரட்சி பெண்ணாக அவள் மாற
புரட்சி செய்து அவளை உயர்த்திட வேண்டும் -தினம்
வறட்டு மனதுடன் நான் தான் என்று குருட்டு பார்வை வேண்டாம்
சிட்டு குருவியாய் அவள் சுதந்திரத்தை மாற்றிடுவோம் .

அடுப்படியில் பெண்கள் எல்லாம் இருந்த நாட்கள் மாறி
அரசியல்படியில் பெண்கள் விரைந்து ஏறிடச் செய்வோம்
ஆண் தான் எல்லாம் என்ற ஒரு நிலையை மாற்றி
சமநிலையை பேண சரிநிகர் எனும் கோசம் கொள்வோம்


தயா