பக்கங்கள்

வெள்ளி, 3 செப்டம்பர், 2010

நல்லூர் மஞ்சம் -இருபதாம் திருவிழா - வள்ளி திருமணம் - பகுதி -7




கந்தன் மஞ்சக் கந்தனை நாம் தொழுதிட
அஞ்சாது பகைவரை எதிகொள்வோம் . பஞ்சென பகைவன் ஓடிச்சென்று முருகா எம்மை காப்பாற்று நாம் செய்த பிழையை பொறுத்திடு என்று தஞ்சம் கொள்வதை காண்பாய் தமிழா - திரு மஞ்சம் ஏறிடும் கந்தனை நம் நெஞ்சம் நிறைய தொழுதிடுவோம் .

இருபத்தொராம் நாளில் சந்திப்போம்

சனி, 28 ஆகஸ்ட், 2010

பதினைந்தாம் திருவிழா -வள்ளி திருமணம் - வில்லுபாட்டு - S.S.Gujuji - நல்லூர் -பகுதி 2


பதினாறாம் திருவிழாவில் சந்திப்போம்

பதினான்காம் திருவிழா -வள்ளி திருமணம் - பகுதி 1

இன்றைய பதினான்காம் திருவிழாவில் இருந்து யாழ் . நல்லூர் ஸ்ரீ தேவி வில்லிசை குழுவினர் கனடாவின் சிவன் ஆலயத்தில் நடத்திய வில்லுப்பாட்டு நிகழ்வில் இருந்து முதலாவது பகுதியினை இன்றும் தொடர்ந்து ஏனைய பகுதிகளையும் ஒலி பரப்பலாம் என்று எண்ணியுள்ளேன் . பொதுவாக நம் தமிழ் மக்கள் ஆலயங்கள் மீதும் இறைவன் மீதும் மிகுந்த பற்று கொண்டவர்கள் . நாட்டில் இடம் பெற்ற யுத்தம் காரணமாக தமது நாடு ,சொந்தம்,வீடு, கோயில் என்று அனைத்தையும் இழந்து தனிமையாய் வேறு தேசம் சென்றாலும் தமது கலாச்சாரத்தையோ அல்லது பண்பாடுகளையோ விட்டு செல்லாதவர்களாக இன்றும் அதனை பின்பற்ற வேண்டும் என்ற பற்று இன்று வரை காணப்படுவதாகவே உள்ளது. தமிழர்கள் என்றும் கலையினை செவ்வன போற்றுபவர்கள் . இதற்கு இவ்வாறான நிகழ்வுகள் எடுத்துக்காட்டாய் உள்ளது. இது போன்ற பல நிகழ்வுகளை இன்றும் செம்மைப்படுத்தி வருகிறார்கள். எனக்கும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை பார்க்க என்றும் ஆசை உண்டு . இந்த நல்லூர் கந்தன் ஆலய நாட்களில் இந்த தொகுப்பினை செய்ய வேண்டும் என்ற ஆவலில் இதனை புகுத்தியுள்ளேன் . எல்லோருக்கும் எல்லாம் வல்ல அலங்காரக் கந்தனின் திருவுளம் கிடைக்க கந்தனை பிரார்த்திக்கிறேன் .




பதினைந்தாம் நாளில் சந்திப்போம்

வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010

பதின்மூன்றாம் திருவிழா - வள்ளி கல்யாணம்

இன்றைய திருவிழாவில் இந்தியாவைச் சேர்ந்த திரு.விஜயராகவச்சரியார் அவர்களின் வள்ளிகல்யானம் என்னும் இசையோடு கூடிய கதாப்பிரசங்கத்தில் இருந்து ஒரு பகுதியினை ஒலி வடிவத்தில் கேட்டு மகிழுங்கள் .


பதினான்காம் திருநாளில் சந்திப்போம்

வியாழன், 26 ஆகஸ்ட், 2010

பன்னிரண்டாம் திருவிழா -நற்சிந்தனைப் பாடல்கள்




இன்றைய திருவிழாப் பதிவில், சிவயோக சுவாமிகள் அருளிச் செய்த"நில்லடா நிலையிலென்று சொல்லுது" என்னும் தலைப்பில் அமைந்த நற்சிந்தனை பாடலை" வரிகள் மூலமாக தந்துள்ளேன் . பார்த்து மகிழுங்கள் என்றும் கந்தன் அருள் புரிவான் .

ஓம்நாம் நாமென்று ஒலிக்குது
ஞாதுருஞானம் போயோடி ஒளிக்குது

நமக்கு நாமே துணையென்று விழிக்குது
நாதாந்த முடியிலேறிக் குளிக்குது

வேதாந்தசித்தாந்தஞ் சமமென்று களிக்குது
மாதாபிதாவை மறவாதிருக்க மதிக்குது

மூதாதைமார் சொல்நெஞ்சில் மதிக்குது
சூதான வார்த்தைதன்னைத் தொலைக்குது

நில்லடா நிலையிலென்று சொல்லுது
நீயேநான் என்று சொல்லி வெல்லுது

உல்லாச மாயெங்குஞ் செல்லுது
உண்மை முழுதுமென்று சொல்லுது

நல்லூரில் செல்லப்பன் என்னப்பன்
நானவரைக் கேட்கும் விண்ணப்பம்

நன்றி: சிவயோக சுவாமிகள் அருளிச் செய்த நற்சிந்தனைப் பாடல்கள்

பதின்மூன்றாம் நாளில் சந்திப்போம்

புதன், 25 ஆகஸ்ட், 2010

பதினோராம் திருவிழா - செந்தமிழால் உந்தனுக்கு மாலை தொடுத்தேன்


இன்றைய பதினோராம் திருநாளில் எனது ஆசான் மதிப்புக்குரிய திரு. வர்ண ராமேஸ்வரன் அவர்களின் கந்தன் பாடல் தொகுப்பில் இருந்து அண்ணன் கானா பிரபா அவர்களின் புளொக்கரில் இருந்து தொகுக்கப்பட்ட நல்லூர் உற்சவத்தின் ஒரு சில தொகுப்புக்களை மீண்டும் இடை செருகி உள்ளேன் . நல்லூர் கந்தனின் திருவிழாவினை நானும் எனது ப்ளொக்கரில் சேர்க்க வேண்டும் என்ற ஆவலுடன் விரும்பியபோது சகோதரன் கானா பிரபா அவர்களின் ப்லோக்கரை பார்க்க கிடைத்தது அதுவே இந்த விருப்பம் . அலங்கார கந்தனின் அருள் தமிழீழ மக்கள் எல்லோருக்கும் கிடைக்கட்டும் . மீண்டும் பிரபா அண்ணனுக்கும் நன்றி தெரிவித்து மீண்டும் சந்திக்கிறேன் .


"செந்தமிழால் உந்தனுக்கு மாலை தொடுத்தேன் -
தமிழ்
தெய்வமான கந்தனே உன் வீதி படுத்தேன்
சிந்திடும் உன் புன்னகையைக் கண்டு ரசித்தேன்
நல்லைத் தேரடியில் வந்துனது காலில் விழுந்தேன்.

பாசமுடன் நான் அழைக்க நல்ல வழி காட்டு - உந்தன்
பத்தினிகளோடெனக்கு வந்து முகம் காட்டு
வாசலெங்கும் எரியுதையா உந்தன் விழி காட்டு
இப்போ வள்ளி தெய்வயானையுடன் என்ன விளையாட்டு.

நீயிருக்கும் வீதியிலே பேய்கள் இருக்காது
நல்லூர் வீடு தொழுவோர்களுக்கு துன்பம் இருக்காது
வாயிருக்கும் வரையுனையே பாடி ஆடுவேன் -தினம்
வாசலிலே வந்திருந்து உன்னை தேடுவேன்

சந்நிதியில் உந்தனது தேரை எரித்தார்கள் -தமிழ்
தந்தவனே எங்களுக்கு சாவை விதைத்தார்கள்
விண்ணதிரக் குண்டு மழை இன்று பொழிவார்கள் -எங்கள்
வேலவனே அன்னவர்கள் என்று விழுவார்கள்?

செந்தமிழால் உந்தனுக்கு மாலை தொடுத்தேன் - தமிழ்
தெய்வமான கந்தனே உன் வீதி படுத்தேன்
சிந்தி வரும் புன்னகையைக் கண்டு ரசித்தேன்
நல்லைத் தேரடியில் வந்துனது காலில் விழுந்தேன்"

பாடலை இயற்றியவர்: புதுவை இரத்தினதுரை
பாடியவர்: வர்ணராமேஸ்வரன்
இசை: இசைவாணர் கண்ணன்

பன்னிரண்டாம் திருநாளில் சந்திக்கிறேன்















பன்னிரண்டாம் திருநாளில் சந்திப்போம்
nanri

திங்கள், 23 ஆகஸ்ட், 2010

பத்தாம் திருவிழா





பத்தாம் நாளில் நடைபெற்ற விழாவின் படங்களை இன்று தரலாம் என நினைக்கின்றேன் எல்லோருக்கும் நல்லூர் கந்தனின் அருள் கிடைக்கட்டும் .


பதினோராம் நாளில் சந்திப்போம்

சனி, 21 ஆகஸ்ட், 2010

ஏழாம் எட்டாம் ஒன்பதாம் திருவிழா - நல்லூர் உற்சவ காலப் படங்கள்





இன்றைய ஆறாம் ஏழாம் திருவிழா நாள்களில் நல்லூர் உற்சவ காலத்தில் எடுக்கப்பட்ட போட்டோ பிரதிகளை போடலாம் என்று நினைத்தேன் . போர் ஓய்ந்து மக்கள் நிம்மதியுடன் சுவாமி தரிசனம் செய்வதை காண்கின்றிர்கள் இன்றைய காலத்தில் தமிழ் மக்கள் மட்டும் அல்லாது பிறமதத்தவர்கள் கூட கந்தனை தரிசனம் செய்ய கூடி இருக்கின்றார்கள் . பௌத்த மதத் துறவிகள் கூட இருப்பதை மேல் உள்ள படத்தில் காண்கின்றிர்கள் . ஆலய உற்சவ காலப் படங்களின் ஏனைய பிரதிகளை இன்னும் ஒரு நாளில் வழங்கலாம் என்று நினைக்கின்றேன் . உங்கள் எல்லோருக்கும் நல்லூர் கந்தனின் அருள் கிடைக்கட்டும்
PATHTHAAM THIRUNALIL SANTHIPPOM
நன்றி

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

ஆறாம் திருவிழா - ஈசனே நல்லூர் வாசனே


இன்றைய திருவிழாப் பதிவில் "ஈசனே நல்லூர் வாசனே" என்ற பாடல் இசைவடிவிலும் மறைந்த திருமதி நாகேஸ்வரி பிரம்மானந்தா அவர்கள் பாடக் கேட்கலாம். பல வருடங்களுக்கு வெளிவந்த இப்பாடலைப் பாடிய திருமதி நாகேஸ்வரி பிரம்மானந்தா, அவர் காலத்தில் "ஈழத்தின் சுப்புலஷ்மி" என்று சிறப்பிக்கப்பட்டாராம்.
ஈசனே நல்லூர் வாசனே
இனிய வேல் முருகா
உனை நம்பினேன் நான்
ஈசனே நல்லூர் வாசனே
பண்ணினேர் மொழியாய்
பாலசுப்ரமண்யா
என்னுடலம் எல்லாம்
நண்ணும் வண்ணம் வா வா
ஈசனே நல்லூர் வாசனே
இனிய வேல் முருகா
உனை நம்பினேன் வா வா
தாசனான யோகசுவாமிசாற்றும்
பாவைகேட்டுக் கிருபை கூர்ந்துவாட்டம் தீர்க்க
வா வா
நன்றி
ஏழாம் திருவிழாவில் சந்திப்போம்

வியாழன், 19 ஆகஸ்ட், 2010

ஐந்தாம் திருவிழா - கந்தா தமிழன் துயர் தீர்க்க ஓடிவா



பொதுவாக சினிமா பாடல்களில் தான் பொப்இசைப் பாடல்கள் வருவது உண்டு ஆனாலும் பக்தி பாடல்கள் பொப் இசையில் பக்திப் பாடல்கள் பாடப்படுவது குறைவென்றே சொல்ல முடியும் . அந்த வகையில் இலங்கையின் பொப் இசை சக்கரவர்த்தி என்று எல்லோராலும்

புதன், 18 ஆகஸ்ட், 2010

நாலாந் திருவிழா - வள்ளியை மணம் பிடித்த வேலவா


நான் கண்ட நல்லஊரை நல்லூரில் தேடுகின்றேன் போர் ஓய்ந்து இன்று அமைதி நிலவும் வேளையிது எல்லோர் வாயும் இதைத்தான் உச்சரிக்கிறது ஆனாலும் நல்லூர் முருகனை கண்டவர்கள் தமிழராய் சிலரும் அல்லாதோர் பலராய்அல்லவா இன்று இருக்கிறது ஒரு காலத்தில்கதிர்காமமும் இப்படித்தான் இருந்ததாக எனது அம்மா அப்பா சொன்னது நினைவில் தோன்றுகிறது எல்லோருக்கும் விளங்கும் என்று நினைக்கிறேன் ஆனாலும் ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன் நான் இந்த நேரத்தில் அரசியல் பேச வரவில்லை பக்திக்கு மதமும் இல்லை மொழியும் இல்லை என்றும் எங்கட அம்மா அப்பா சொன்னது நினைவில் உள்ளது அதற்காக அன்று அந்த கதிர்காம கந்தனை நாம் விட்டது போல மன்னிக்கவும் கந்தன் நம்மை விட்டானா இல்லாட்டி கயவர் நம்மை விடவில்லையா எல்லாம் இனி நம்மட கையில் தான் உள்ளது அந்த கந்தன் கையில் தான் உள்ளது கந்தா அருள் புரிவாய் நாலாம் நாளில் அடியவருக்கு காட்சி கொடுக்க ஓடி வருவாய் மால்மருகா இன்றைய நான்காம் நாள் திருவிழாவில் நமது ஈழம் தந்த கவிமகன் புதுவை இரத்தினதுரையின் கவி வரியில் உதித்த இந்த பாடலை பார்த்து மகிழுங்கள்
பாடியவர் எனது ஆசான் திரு . வர்ண ராமேஸ்வரன்
வானமரர் துயர் தீர்க்க வண்ண மயில் ஏறி நின்றாய்
தேனமுத வள்ளி தெய்வயானையுடன் கூடி நின்றாய்
நானழுத கண் மழையால் நல்லையெங்கும் வெள்ளமடா
நாயகனே எங்களுக்கு நல்ல வழி சொல்லனடா
வேல் முருகா...அருள் தா முருகா....வேல் முருகா...அருள் தா முருகா........மால் மருகா....நல்லை வாழ் முருகா...மால் மருகா....நல்லை வாழ் முருகா...வா முருகா....துயர் தீர் முருகா........மால் மருகா....நல்லை வாழ் முருகா...
நல்லையில் வாழ்கின்ற நாதனின் திருநாட்டில்
தொல்லைகள் குடியேறுமா.......
எல்லையில் இருந்தினியும் எறிகணையால்
எம்மைக் கொல்லுதல் அரங்கேறுமா.......
நல்லையில் வாழ்கின்ற நாதனின் திருநாட்டில்
தொல்லைகள் குடியேறுமா.......
(வேல் முருகா...அருள் தா முருகா....)
அசுரர் நிலைகள் முன்னர் எரியும் வரையில் நின்று
மலையில் சிரித்திட்ட வேலவா
அதர்மப் படைகள் இன்று எறியும் கணைகள் வென்று
புலிகள் உலவுகின்ற வேளை வா
தமிழைப் பிறப்பித்த வேலவாவிழிகள் திறந்திட்டு ஓடிவாதமிழைப் பிறப்பித்த வேலவாவிழிகள் திறந்திட்டு ஓடிவா
வேலவா நீ ஓடிவாவேலவா நீ ஓடிவா
நன்றி
ஐந்தாந் திருவிழாவில் சந்திக்கிறேன்

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

மூன்றாம் திருவிழா - உந்தன் அருள் வேண்டும்தா முருகா







நல்லைக் கந்தன் ஆலய மகோற்சவ காலப் பதிவுகளில் இன்று நல்லை முருகன் பாடல் ஒன்று ஒலியிலும், எழுத்திலுமாக வருகின்றது.

பாடலாசிரியர்: தாயகக் கவி புதுவை இரத்தினதுரைஇசை வழங்கியவர்: இசைவாணர் கண்ணன்பாடலைப் பாடுகின்றார்: இசைக்கலைமணி ஸ்ரீ

வர்ணராமேஸ்வரன்.
தேரடியில் காலையிலே நானழுத வேளையிலே
நீ திரும்பிப் பார்க்கவில்லை முருகா - உன்
காலடியில் நான் இருந்து கண் சொரிந்த போதினிலே
கண்டு மனமிரங்கவில்லை முருகா
கண் திறந்து பார்க்க வில்லை முருகா - என்னை
கண்டு மனமிரங்கவில்லை முருகா
நல்லை நகர் வீதியிலே நாளும் சென்று அழுபவர்க்கு
தொல்லை அற்று போகுமென்றார் முருகா - நான்
வெள்ளை மணல் மீதுருண்டு வேலவனே என்றழுதேன்
துள்ளி வந்து சேரலையே முருகா
வேரிழந்து கண்களிலே நீர் சொரிந்த வேளையிலே
வேறிடத்தில் நீ ஒளித்தாய் முருகா - நீ
ஏறி வந்த தேர் இருக்கு, இழுத்து வந்த வடம் இருக்கு
எங்கேயடா போய் ஒளித்தாய் முருகா
செந்தமிழால் வந்த குலம் நின்று களமாடுகையில்
உந்தன் அருள் வேண்டுமடா முருகா - நீ
வந்திருந்து பூச்சொரிந்தால் வாசலிலே கையசைத்தால்
வல்ல புலி வெல்லுமடா முருகா

திங்கள், 16 ஆகஸ்ட், 2010

இரண்டாம் திருவிழா - எந்நாளும் நல்லூரை வலம் வந்து தொழுதிடுவோம்

நல்லூர் விழாக் காலப் பதிவுகளில் இன்றைய படையலாக வருவது சிவயோக சுவாமிகளின் இரண்டு நற்சிந்தனைப் பாடல்களின் ஒலி வடிவமும், அவற்றின் எழுத்து வடிவமும். "எந்நாளும் நல்லூரை" என்ற பாடலைத் தாங்கிய இசைப் பேழை யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் சிவதொண்டன் நிலையத்தினரால் வெளியிடப்பட்டது. இப்பாடலை உருவாக்கியதோடு தகுந்த சங்கீத இலட்சணமும் கொடுத்தவர் சிவயோக சுவாமிகள். எளிமையான வரிகளில் வலிமையான பக்தியுணர்வைத் தூண்டும் இப்பாடல் நல்லூர் நாயகன் திருவிழாக் காலத்தில் உங்களுக்கும் அவன் பால் சித்தத்தைக் கொண்டு செல்ல உறுதுணையாக அமையும்.
ராகம்: பிலஹரிதாளம்: ரூபகம்பல்லவிஎந்நாளும்
நல்லூரை வலம் வந்துவணங்கினால்
இடர்கள் எல்லாம் போமேஅனுபல்லவிஅந்நாளில் ஆசான் அருந்தவஞ் செய்த இடம்அது ஆதலாலே அதிசயம் மெத்தவுண்டு(எந்நாளும் நல்லூரை வலம் வந்துவணங்கினால் இடர்கள் எல்லாம் போமே)
சரணம்
வேதாந்தம் சித்தாந்தம் கற்றதனால் என்னவேடிக்கைக் கதைகள் பேசினால் என்னவீதியில் வந்தொருக்கால் விழுந்து கும்பிட்டால்வில்லங்கம் எல்லாம் இல்லாமல் போமே(எந்நாளும் நல்லூரை வலம் வந்துவணங்கினால் இடர்கள் எல்லாம் போமே)சத்தியம், பொறுமை, சாந்தம், அடக்கம்நித்தியா நித்தியம் பெறினும் - நிபுணபக்தி செய் உத்தமர் பரவும் நல்லூரில்நித்தியம் வந்து பார்த்தால் முத்தி நிச்சயமே(எந்நாளும் நல்லூரை வலம் வந்துவணங்கினால் இடர்கள் எல்லாம் போமே)
மூன்றாம் திருவிழாவில் சந்திக்கிறேன்

ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010

நல்லை கந்தன் ஆலயம் கொடியேற்றம்

ஈழ நல்லூர் கந்தசுவாமி கோயில் மகோறசவ நிகழ்வுகள் இன்றிலிருந்து அடுத்த 25 நாட்கள் இடம்பெற இருக்கின்றன. இன்று makkal நமது ாழ்வில் மிகவும் ஆறுதல் கிடைக்குமா என்று ஏங்கி தவித்து கொண்டு இருக்கிறார்கள் இன்று நாடு அமைதியுடன் இருப்பதாக உலகம் நினைத்து கொண்டு இருந்தாலும் தமிழ் மக்கள் வாழ்வில் அது மிகவும் தூரமாக தான் உள்ளது காரணம் நீண்ட கொடிய போரினால் ஆயிர கணக்கான மக்கள் தமது சொந்தம் சுகம் வீடு என்ற சகலதையும் இழந்து தவித்துக்கொண்டு இருக்கிறார்கள் இவ்வளவும் அற்ற நேரத்தில் எல்லாம் வல்ல எம்பெருமானின் அருள் கிடைத்து நம் எல்லோர் வாழ்விலும் சாந்தியும் சமாதானமும் நிலவ வேண்டிப் பிரார்த்தித்து தினம் ஒரு கந்தப் பெருமான் பாடலை வழங்கலாம் என்றிருக்கின்றேன். எல்லாம் ஆண்டவன் சித்தம். பிரம்மஸ்ரீ ந.வீரமணி ஐயர் யாத்த "நல்லை முருகன்" பாடலை, மோகன்ராஜ் இசையமைப்பில் ரகுநாதன் பாடுகின்ர்றார்
நாதம் கேட்குதடி.......நல்லூர் நாதம் கேட்குதடி....
நாதம் கேட்குதடி நல்லூர் நாதம் கேட்குதடி
நல்லூர் நாதன் கோபுர ஆலய மணி நாதம் கேட்குதடி
நல்லூர் நாதன் கோபுர ஆலய மணி நாதம் கேட்குதடி
கீதம் ஒலிக்குதடி.....கீதம் ஒலிக்குதடி.....
அன்பர் பாடி பரவி உவகை குதித்திடும்
கீதம் ஒலிக்குதடி..........
அன்பர் பாடி பரவி உவகை குதித்திடும்
கீதம் ஒலிக்குதடி..........

நாதம் கேட்குதடி ..........
நல்லூர் நாதன் கோபுர ஆலய மணி நாதம் கேட்குதடி
ஒலியின் அலைகள் விரவிச் செவியில்.......
ஒலியின் அலைகள் விரவிச் செவியில்ஓம் முருகா.........
ஓம் முருகா.......ஓம் முருகா
ஒலியின் அலைகள் விரவிச் செவியில்
ஓம் முருகா என ஒலிக்குதடி

கலியுகத் தெய்வம் கந்தனென்றே மனம் கனிந்துமெத்தாய் உருகுதடிகலியுகத் தெய்வம் கந்தனென்றே மனம் கனிந்து
மெத்தாய் உருகுதடி
மலியும் கனிகள் குலுங்கும் நல்லையில்
மலியும் கனிகள் குலுங்கும் நல்லையில்
மால் மருகன் அருள் இருக்குதடி
மால் மருகன் அருள்
வலிவும் வனப்பும் வளமும் அருளும்
வடிவேலவன் புகழ் பாடியே
அடியார் தொழக் கவிபாடிடும்
வலிவும் வனப்பும் வளமும் அருளும்
வடிவேலவன் புகழ் பாடியே
அடியார் தொழக் கவிபாடிடும்

நாதம் கேட்குதடி.......நல்லூர் நாதம் கேட்குதடி....
நாதம் கேட்குதடி...... நல்லூர் நாதம் கேட்குதடி....
நாதம் கேட்குதடி.......நல்லூர் நாதம் கேட்குதடி....
நாதம் கேட்குதடி...... நல்லூர் நாதம் கேட்குதடி....
இரண்டாம் நாள் திருவிழாவில்
சந்திக்கிறேன்
தயா










இந்த வார இணையதளம்



படங்கள், போட்டோக்கள் விதம் விதமாய்ப் பெற மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் இமேஜ் கிராபிக்ஸ் வரைகலைஞர்களுக்கான போட்டோக்கள் மற்றும் படங்களைத் தரும் ஓர் அருமையான இணைய தளம் ஒன்றைக் காண நேர்ந்தது. இந்த தளத்தின் பெயர் Open Photo. இது ஒரு போட்டோக்களின் இருப்பு நிலையம் என்றே கூறலாம். வியக்கத்தக்க பல போட்டோக்கள், கலைப் படங்கள் இதில் காட்டப்படுகின்றன. போட்டோக்களின் வகை (Categories) குறித்து இதில் தேடி, படங்களைப் பெறலாம். ஏதேனும் ஒரு போட்டோவில் கிளிக் செய்தால், அந்த வகைப் படங்கள் நமக்கு நிறையக் காட்டப்படும். பெரும்பாலும் இலவசமாக டவுண்லோட் செய்யக் கூடிய வகையில் தான் இவை இங்கு தரப்படுகின்றன. கட்டணம் செலுத்திக் கிடைக்கும் படங்களும் இதில் உள்ளன. இந்த தளம் காட்டும் Categories டேப்பில் கிளிக் செய்தால், அனைத்து வகைகளும் அவற்றின் பெயருடன் பட்டியலிடப்படுகின்றன. தேவையான வகையினைத் தேடிப் பார்த்து, போட்டோக்களை டவுண்லோட் செய்து கொள்ளலாம். ஒவ்வொரு இமேஜில் கிளிக் செய்திடுகையில், அதன் வலது பக்கத்தில், அந்த படத்திற்கான உரிமம் குறித்த தகவல்கள் காட்டப் படுவதனைக் காணலாம். வெவ்வேறு வகையான உரிமங்கள் தரப்பட்டு, அவற்றை எப்படிப் பயன்படுத்தலாம் என்றும் காட்டப்பட்டுள்ளன. நம் இணைய தளங்கள், பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் ஸ்லைடுகள் மற்றும் நாம் தயாரிக்கும் சொந்த வாழ்த்து அட்டைகளில் பயன்படுத்த இந்த தளத்தில் பலவகையான படங்களைக் காணலாம். எதற்கும் ஒரு முறை சென்று பார்த்து நல்லதெனத் தெரிந்தால், புக் மார்க் செய்து பயன்படுத்துங்கள். இந்த தளத்தின் முகவரி: http://www.openphoto.net

ஜி போட்டோ ஸ்பேஸ்

கூகுள், தன் வாடிக்கையாளர்களுக்கு, போட்டோக்களைப் பதிந்து வைத்திட இடம் தருவதிலும், தனக்கென ஒரு தனி வழியைக் கையாண்டு வருகிறது. ஜி போட்டோ ஸ்பேஸ் எனத் தனியே ஒரு வசதியினை இதற்கெனத் தருகிறது. பயர்பாக்ஸ் பயன்படுத்துபவர்கள் இந்த வசதியைப் பயன்படுத்த, ஓர் ஆட் ஆன் தொகுப்பு தரப்பட்டுள்ளது.போட்டோக்களை இணைய தளத்தில் வைத்து பாதுகாப்பது இன்று பரவலாகப் பலரும் பயன்படுத்தும் ஒரு வசதியாக மாறி வருகிறது. பல இணைய தளங்கள் போட்டி போட்டுக் கொண்டு இதற்கான வசதிகளைச் செய்து வருகின்றன. போட்டோக்களை அனைவரும் காணும் வகையிலோ அல்லது குறிப்பிட்ட சிலர் மட்டும் காணும் வகையிலோ பதிந்து வைக்கலாம். ஒவ்வொருவருக்கும் போட்டோக்களைப் பதிய தரப்படும் டிஸ்க் இடம், தளத்திற்கு தளம் மாறுபடுகிறது. ஜிமெயில் அக்கவுண்ட் உள்ளவர்கள் அனைவரும், கூகுள் தரும் ஜி போட்டோ ஸ்பேஸ் பகுதியினையும் பயன்படுத்தலாம். உங்களுக்கு போட்டோக்களை ஆன்லைனில் அனுப்புவதில் சிக்கல்களை எதிர் கொள்கிறீர்களா? அப்லோட் செய்வதில் பெரிய அளவில் பிரச்னைகளைச் சந்திக்கிறீர்களா? சேமிக்கும் இடம் அதிகமாக உங்களுக்கு வேண்டுமா? அதற்காக நீங்கள் பயன்படுத்தும் தளம் கூடுதல் கட்டணம் கேட்கிறதா? உங்கள் தனி நபர் சுதந்திரம் இந்த வகையில் பாதிக்கப்படுகிறதா?அப்படியானால், நீங்கள் கூகுள் தரும் ஜிபோட்டோ ஸ்பேஸ் பயன்படுத்தத் தொடங்கலாம். கூகுள் தரும் கூடுதல் வசதிகளையும், அதற்கான பயர்பாக்ஸ் ஆட் தொகுப்பு குறித்தும் இங்கு காணலாம். கூகுள் தரும் ஜிபோட்டோ ஸ்பேஸ் வசதிக்கு எந்த நிலையிலும் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை.பயர்பாக்ஸ் எக்ஸ்டன்ஷன் மூலம் 50 போட்டோக்களை ஒரு தொகுப்பாக அப்லோட் செய்திடலாம். மற்ற எந்த இணைய அப்லோடிங் வசதியைக் காட்டிலும், இது ஐந்து மடங்கு வேகத்தில் அப்லோட் செய்கிறது.பல தளங்கள், குறைந்த அளவே போட்டோக்களை சேமிக்க இடம் தருகின்றன. ஜிபோட்டோ ஸ்பேஸ் இதற்கென வரையறையை விதிக்கவில்லை. ஜிமெயிலுக்கு ஒதுக்கப்படும் 7 ஜிபி மற்றும் கூடுதல் இடம் தரத் தயாராய் உள்ளது. இணைய தளத்தில் பதிக்கப்படும் போட்டோக்களை மற்றவர்கள் பகிர்ந்து பார்ப்பதன் மூலம், உலகம் முழுவதும் உள்ள மக்கள் பார்த்துவிடுவார்களோ என்ற அச்சம் இருந்தால், ஜிபோட்டோ ஸ்பேஸ் அதனைத் தீர்க்கிறது. நீங்கள் உங்கள் தனிநபர் உரிமையை 100% பாதுகாத்துக் கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கும் தகவல்களுக்கும் http://www.gphotospace.com/features.html என்ற முகவரியில் உள்ள தளத்தினைப் பார்க்கவும்.

நன்றி தினமலர்