பக்கங்கள்

வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

அடோப் ஃபிளாஷ் (1)- அறிமுகம்




ஏதாவது தொழிற்நுட்ப பதிவுகள் போடலாம் என்று இந்த பிரிவை ஆரம்பித்து 4 பதிவு போட்டுட்டேன். அப்புறம் என்ன பண்ணலாம்னு தெரியலை, நிறைய பேர் புதிய வெப்சைட்டுகள், அப்புறம் ஃபோட்டோஷாப் மற்ற விஷயங்கள்னு நிறைய மிகச்சிறப்பா எழுதிகொண்டு வராங்க.சரி புதுசா எதாவது எழுதனும்னு யோசிச்சேன். எனக்கு கொஞ்சம் ஃபிளாஷும் 3D அனிமேஷனும் தெரியும் (எல்லாம் சொந்தமா கற்றுக் கொண்டது). மேலும் தமிழில் இதுவரை யாரும் இவற்றை பற்றி எழுதியது போல் தெரியவில்லை. அதனால் நான் இனிமேல் இங்கே ஃபிளாஷை பற்றி நான் கற்றுக் கொண்டவை, படித்தவை பார்த்தவைகளை பற்றி தமிழில் எழுதப் போகிறேன்.தங்களுக்கு உபயோகமாக இருந்தால் மிகவும் சந்தோசப்படுவேன். பிடித்திருந்தால் கமெண்ட் செய்யுங்கள்.இது வரை என் பிளாகிற்கு வந்து விமர்சனம் அளிக்கும் அனைவருக்கும் மிக்க நன்றி!
நான் இங்கே தரப்போகும் அனைத்து விஷயங்களுமே அடோப் ஃபிளாஷ் CS3யில் செய்யப்படுபவை. எனவே உங்களிடம் சிஸ் 3 இருந்தால் நல்லது. இல்லையென்றால் எந்த வெர்சனாக இருந்தாலும் பிரச்சினையில்லை. உங்களுக்கு பிளாஷ் கற்றுக் கொள்ள ஆர்வமிருந்து உங்களிடம் ஃபிளாஷ் மென்பொருள் இல்லையென்றால் இதோ
இங்கே(112mb) கிளிக் செய்து அடோப் சிஸ் 3 ஐ டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். இது ஒரு போர்டபிள் மென்பொருள். எனவே இன்ஸ்டால் செய்ய தேவையில்லை. மேலும் தயார் செய்த மூவிக்களை பார்க்க அடோப் பிளாஷ் பிளேயர் தேவை எனவே அதை இங்கே கிளிக் செய்து டவுன்லோட் செய்துகொள்ளவும்.
முதல் பதிவில் ஃபிளாஷில் கிழமை, தேதி வருடத்தை எப்படி உருவாக்குவது என பார்ப்போம்.முதலில் அடோப் பிளாஷ் சிஎஸ் 3ஐ திறக்கவும். அதில் Create New என்பதில் Flash File (ActionScript 2.0) என்பதை கிளிக் செய்யவும்.இப்படி ஒரு விண்டோ திறக்கும்
அதில் Text Toolஐ கிளிக் செய்து வெள்ளை விண்டோவில் சதுரம்போல் இழுத்து விடவும். அது இப்படி இருக்கும்.
பிறகு அதில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் செட்டிங்குகளை அமைக்கவும். 1. Dynamic Text 2. Font உங்களுக்கு விருப்பமானதை தேர்ந்தெடுக்கலாம்.3. Var: என்ற இடத்தில் theDate என்று டைப் செய்யவும்.4. உங்களுக்கு விருப்பமான நிறம், ஃபோண்ட் சைஸ் போன்றவற்றை கொடுக்கலாம்.அதை தேர்ந்தெடுத்துக் கொண்டு, F8ஐ அழுத்தி அதை சிம்பலாக கன்வர்ட் செய்யவும். அதில் Movie Clip என்பதை தேர்ந்தெடுக்கவும். இல்லையென்றால் Modify என்பதில் convert to symbol என்பதை கிளிக் செய்து Movie Clipஐ கிளிக் செய்யவும்.பிறகு நடுவில் நீங்கள் இழுத்து விட்ட செவ்வகத்தை ரைட் கிளிக் செய்து Actions என்பதை தேர்ந்தெடுக்கவும். அங்கே உள்ள காலியிடத்தில் கீழ்காணும் ஆக்சன்ஸ்கிரிப்டை பேஸ்ட் செய்யவும்.
onClipEvent (load){
weekdays = ["Sunday","Monday","Tuesday",
"Wednesday","Thursday","Friday","Saturday"];
months = ["Jan","Feb","Mar","Apr","May","Jun","Jul",
"Aug", "Sep", "Oct","Nov","Dec"];
}
onClipEvent (enterFrame){
myDate = new Date();
tDay = weekdays[myDate.getDay()];
tMonth = months[myDate.getMonth()];
tDate = myDate.getDate();
tYear = myDate.getFullYear();
theDate = tDay+", "+ tMonth+" "+tDate+", "+tYear;
}
பிறகு உங்கள் மூவியை பார்க்க Control+Enterஐ கிளிக் செய்யவும்.பிறகு இதை சேமிக்க File என்பதில் Export என்பதை கிளிக் செய்து Export to movie என்பதை கிளிக் செய்து swf ஃபைலாக சேமிக்கவும்.இதை தமிழில் செய்ய Font என்பதில் Latha என்பதை தேர்ந்தெடுக்கவும். கீழ்காணும் ஆக்சன்ஸ்கிரிப்டை பேஸ்ட் செய்யவும்.
onClipEvent (load){weekdays = ["ஞாயிறு","திங்கள்","செவ்வாய்","புதன்","வியாழன்","வெள்ளி","சனி"];months = ["ஜனவரி","பிப்ரவரி","மார்ச்","ஏப்ரல்","மே","ஜூன்","ஜூலை","ஆகஸ்டு", "செப்டம்பர்", "அக்டோபர்","நவம்பர்","டிசம்பர்"];}onClipEvent (enterFrame){myDate = new Date();tDay = weekdays[myDate.getDay()];tMonth = months[myDate.getMonth()];tDate = myDate.getDate();tYear = myDate.getFullYear();theDate = tDay+", "+ tMonth+" "+tDate+", "+tYear;}
நன்றி
எஸ் . கே அண்ணாவுக்கு
தொடரும்

வியாழன், 12 ஆகஸ்ட், 2010

வேர்டில் ஹைப்பர் லிங்க் வேண்டாமா?

வேர்ட் தொகுப்பில் உருவாக்கப்படும் டாகுமெண்ட்களில், ஏதேனும் இணைய தளம் ஒன்றின் முகவரியினை அமைத்தால், அது ஒரு ஹைப்பர் லிங்க்காக மாற்றப்படும். அதாவது, அதில் கிளிக் செய்தால், இணைய இணைப்பில் இருந்தால், உடன் அந்த தளத்திற்கு இணைப்புகிடைக்கும். அதற்கேற்ற வகையில் நீல நிறத்தில் அந்த முகவரி அமைக்கப்படுவதுடன், கீழே அடிக்கோடிடப்படும். ஆனால் இதனைப் பலர் விரும்புவதில்லை. டாகுமெண்ட்டின் ஓர் அங்கமாகத்தான், தகவலுக்கான முகவரியாகத்தான் இணைய தள முகவரி இருக்க வேண்டும் என விரும்புவார்கள். ஆனால் வேர்ட் தானாக அல்லவா அமைக்கிறது! இதனை எப்படித் தடுப்பது என்று எண்ணுகிறீர்களா?அதற்கான செட்டிங்ஸ் வழிகளைக் காண்போம்.நீங்கள் வேர்ட் 2007 அல்லது வேர்ட் 2010 தொகுப்பு பயன்படுத்துபவராக இருந்தால் . . 1.முதலில் Word Options டயலாக் பாக்ஸினைக் கொண்டு வரவும். (வேர்ட் 2007 தொகுப்பில் Office பட்டனை அழுத்தி, பின்னர் Word Options கிளிக் செய்திடவும். வேர்ட் 2010 தொகுப்பில் ரிப்பனில் உள்ள File டேப்பினைக் கிளிக் செய்திடவும். பின்னர் அதில் Options தேர்ந்தெடுக்கவும். 2. இந்த பாக்ஸின் இடது பக்கம் உள்ள Proofing என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். 3. இங்குள்ள Auto Correct ஆப்ஷன்ஸ் பட்டனில் கிளிக் செய்திடவும். வேர்ட் ஆட்டோ கரெக்ட் டயலாக் பாக்ஸைக் காட்டும். 4. இங்கு Auto Format As You Type என்ற டேப் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதனை உறுதி செய்திடவும்.5. இந்த டயலாக் பாக்ஸின் நடுவில், Replace As You Type என்ற பிரிவின் கீழாக இருக்கும் nternet and Network Paths With Hyperlinks என்ற பாக்ஸில் டிக் அடையாளம் இருந்தால், அதனை எடுத்துவிடவும். உடனே இந்த டயலாக் பாக்ஸை மூடிவிட வேண்டாம். மேலே தரப்பட்டுள்ள நடவடிக்கைகளில், வேர்ட் தொகுப்பில் அமைக்கப்படும் இணைய முகவரிகளை டைப் செய்திடுகையில் ஹைப்பர் லிங்க்காக மாற்ற வேண்டாம் என செட் செய்திருக்கிறீர்கள். இதற்கான இன்னொரு வழியையும் நீங்கள் பின்பற்ற விரும்பலாம். வேர்டில், முழு டாகுமெண்ட் ஒன்றை ஒரு சின்ன வழியில் ஆட்டோ பார்மட் செய்திடும் வழியும் தரப்பட்டுள்ளது. இந்த Word Auto Formatting Á\v Quick Access toolbar ல் அதற்கான கட்டளையை இணைப்பதன் மூலம் நடைபெறுகிறது. பொதுவாக இன்னொரு வேர்ட் பிராசசரிலிருந்து டாகுமெண்ட் ஒன்றை, அல்லது ஆஸ்கி டெக்ஸ்ட் பைல் ஒன்றை, வேர்ட் தொகுப்பிற்குக் கொண்டு வருகையில், அதனை வேர்ட் தொகுப்பிற்கேற்ற வகையில் பார்மட் செய்திட இந்த டூல் தேவைப்படும். இவ்வாறு முழுவதுமாக ஆட்டோ பார்மட் செய்யப்படுகையில், இணைய தள முகவரிகள் ஹைப்பர் லிங்க்குகளாக தானாக மாற்றப்படும். இந்த முயற்சியிலும் அவை மாற்றப்பட வேண்டாம் என எண்ணினால், கீழ்க்கண்ட செட்டிங்ஸ் அமைப்புகளை மேற்கொள்ளவும். 1. AutoFormat டேப்பில் கிளிக் செய்திடவும். 2. டயலாக் பாக்ஸின் நடுவில், Replace என்ற பிரிவில் கீழாக உள்ள Internet and Network Paths With Hyperlinks என்பதில் தரப்பட்டிருக்கும் செக் பாக்ஸில் உள்ள டிக் அடையாளத்தினை எடுத்துவிடவும். 3. பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.நீங்கள் வேர்ட் 2003 பயன்படுத்துகிறீர்களா! Tools கிளிக் செய்து Auto correct options தேர்ந்தெடுக்கவும். இதில் Autoformat as you type என்ற டேப் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதனை உறுதி செய்திடவும். இங்கு நடுவே Replace as you type பிரிவில் Internet and Network Paths With Hyperlinks என்பதில் தரப்பட்டிருக்கும் செக் பாக்ஸில் உள்ள டிக் அடையாளத்தினை எடுத்துவிடவும். பின்னர் ஓகே கிளிக் செய்து மூடவும். இனி வேர்ட் தொகுப்பில் நீங்கள் டைப் செய்திடும் இணைய முகவரிகள் டாகுமெண்ட்டின் சொற்களாகத் தான் இருக்கும். அந்த முகவரி சுட்டும் இணைய தளத்திற்கு எடுத்துச் செல்லும் ஹைப்பர் லிங்க்காக இருக்காது.சில முக்கிய கீ தொகுப்புகள்:Shift F3: இந்த கீகளை அழுத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களில் lowercase, initial capitals, and uppercase என மாற்றங்களை மேற்கொள்ள முடியும். Shift F4: இறுதியாக மேற்கொண்ட (Find) சொல் தேடும் பணி மீண்டும் மேற்கொள்ளப்படும். Shift F5: கடைசியாக மாற்றங்கள் ஏற்படுத்திய இடத்திற்கு நீங்கள் எடுத்துச் செல்லப்படுவீர்கள். இது பைலை மூடித் திறந்தாலும் மேற்கொள்ளப்படும். எடுத்துக்காட்டாக ஒரு டாகுமென்ட் பைலின் 73 ஆவது பக்கத்தில் சிறிய மாற்றம் ஒன்றை மேற்கொண்டு பின் பைலை மூடிவிடுகிறீர்கள். பின் சில நாட்கள் கழித்து அதனைத் திறக்கிறீர்கள். எதுவரை திருத்தங்கள் மேற்கொண்டோம் என்று தெரியவில்லை. கவலையே வேண்டாம். Shift F5 கீகளை அழுத்தினால் போதும். கர்சர் நீங்கள் பைலை மூடிய இடத்தில் நிற்கும். Shift F6: திறந்திருக்கும் டாகுமெண்ட்களிடையே செல்ல இந்த கீகள் பயன்படும். F4 : நீங்கள் மேற்கொண்ட கடைசி வேலையை மீண்டும் ஏற்படுத்தும். இது எதுவாக வேண்டு மானலும் இருக்கலாம். தேடுதல், டைப் செய்தல், பார்மட் செய்தல் என எந்த பணியாக இருந்தாலும் அது மீண்டும் மேற்கொள்ளப்படும்.F7: ஸ்பெல் செக்கர் திறக்கப்படும்.F12: Save அண் டயலாக் பாக்ஸ் திறக்கப்படும் வேர்டில் டேபிளைத் தேடவேர்ட் டாகுமெண்ட்டில் சொற்கள் இருக்குமிடம் தேடி அறிய, பைண்ட் அண்ட் ரீபிளேஸ் பயன்படுத்துகிறோம். டாகுமெண்ட் ஒன்றில் பல டேபிள்களைப் பயன்படுத்துகையில் அவை இருக்கும் இடங்களைக் கண்டறிய முடியுமா! முடியும். கண்டறிவது மட்டுமல்ல, ஒரு டேபிளிலிருந்து டாகுமெண்ட்டில் இரண்டு டேபிள் தாண்டி உள்ள இன்னொரு டேபிளுக்கும் தாவிச் செல்லலாம். அப்படியா! என்கிறீர்களா. ஆம், அதற்கான வழிகளை இங்கு காண்போம்.முதல் வழி Go To கட்டளை பயன்படுத்துவது.1. F5 அழுத்துங்கள். இப்போது வேர்ட், பைண்ட் அண்ட் ரீபிளேஸ் கட்டத்தினைக் காட்டும். இதில் Go To டேப்பில் கர்சர் இருக்கும். 2. இந்த டயலாக் பாக்ஸின் இடதுபக்கத்தில் Go To What பட்டியல் இருக்கும். இதில் Go To What என்பதைத் தேர்ந்தெடுக்கவும். 3. அடுத்து Next என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்த டேபிளுக்கு நீங்கள் எடுத்துச் செல்லப்படுவீர்கள்.4. இதில் Previous என்பதில் கிளிக் செய்தால், அதற்கு முந்தைய டேபிளுக்குச் செல்வீர்கள்.5. இப்படியே சென்று நீங்கள் விரும்பும் டேபிளுக்குச் செல்லலாம். இதற்கு இன்னொரு வழியும் உள்ளது. Object BrowserI¨ பயன்படுத்தியும் இந்த வகைத் தேடலை மேற்கொள்ளலாம். இந்த ஆப்ஜெக்ட் பிரவுசர் எங்கு உள்ளது?வலது பக்கம் உள்ள நெட்டு ஸ்குரோல் பாரை முதலில் பார்க்கவும். அதன் கீழாக இரட்டை அம்புக்குறிகள் மேலும் கீழுமாக இருக்கும். இதன் நடுவே ஒரு சிறிய வட்டக் குறியீடு இருக்கும். இந்த இரட்டை அம்புக்குறியுடன் உள்ள அடையாளத்தில் கிளிக் செய்தால், கர்சர் இருக்கும் இடத்தில் மேலாக உள்ள டேபிளைக் காணலாம். கீழாகக் காட்டும் இரட்டை அம்புக் குறியில் கிளிக் செய்தால், கீழாக உள்ள டேபிளுக்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள்.இந்த சிறிய வட்ட அடையாளம் தான் Object Browser. இதில் கிளிக் செய்தால், உடன் பல பேலட்கள் அடங்கிய கட்டம் கிடைக்கும். இதனை ஆப்ஜெக்ட் பேலட் என அழைப்பார்கள். இதில் Browse by Table என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து கீழ் நோக்கி அல்லது மேல் நோக்கி இருக்கும் அம்புக் குறிகளைத் தேர்ந்தெடுத்தால், அதற்கேற்றபடி டேபிள்களுக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்.

இந்த வார டவுண்லோட்

கடந்த பத்து ஆண்டுகளில் வீடியோ இயக்கும் சாதனங்களின் எண்ணிக்கையும், வகையும் அதிகரித்து உள்ளன. வீடியோ கேம் சாதனங்கள், மொபைல் போன்கள், எம்பி3 பிளேயர்கள், லேப்டாப் கம்ப்யூட்டர்கள், நெட்புக் மற்றும் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்கள் என இந்தப் பட்டியல் தொடர்கிறது. ஒவ்வொரு சாதனமும் வீடியோ பைல்களை இயக்க தனித்தனி வரையறைகளைக் கொண்டுள்ளன. இந்த சாதனங்களுக்கேற்ற பார்மட்டுகளில் வீடியோ பைல்கள் இருக்க வேண்டியது கட்டாயமாகிறது. இவற்றுடன் திரை அளவு மற்றும் ரெசல்யூசன் அளவுகளும் வீடியோ இயக்கத்திற்கு வரையறை களைத் தருகின்றன. எனவே வீடியோ பைல்களை இந்த சாதனங்களில் இயக்க முயற்சிக்கையில், அவற்றின் பார்மட் வரையறைகளை, அந்த சாதனங்களுக்கேற்ற வகையில் மாற்றி அமைக்க வேண்டியுள்ளது. பார்மட் மாற்றம் ஓர் அவசியத் தேவையாகிவிட்ட சூழ்நிலையில், இதற்கு உதவிட பல இலவச புரோகிராம்கள், இணையத்தில் கிடைக்கின்றன. அவற்றில் மிக அதிகமாகப் பயன்படக் கூடிய புரோகிராம் ஹேம்ஸ்டர் பிரீ வீடியோ கன்வர்டர் (Hamster Free Video Converter) ஒன்று. இந்த புரோகிராம் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கக் கூடியது.வீடியோ பார்மட் மாற்றம் மூன்று நிலைகளில் மிக வேகமாக மாற்றப்படுகிறது. ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வீடியோக்களை ஒரே நேரத்தில் மாற்றுகிறது. முதலில் வீடியோ பைல்களை மொத்தமாக இதன் இன்டர்பேஸுக்குள் இழுத்து அமைத்துவிடலாம். ஏறத்தாழ அனைத்து வீடியோ பார்மட்களுக் கிடையேயும் (AVI, MPG, WMV, MPEG, FLV, HD, DVD, M2TS மற்றும் பிற) இந்த புரோகிராம் மாற்றத்தினை ஏற்படுத்தித் தருகிறது. இரண்டாவது நிலையில் மாற்றத்திற்கான வரையறைகளைத் தேர்ந்தெடுக்கிறோம். பைல் பார்மட் அடிப்படையில் மட்டுமின்றி, சாதனங்களுக்கு ஏற்ற வகையிலும் இது பார்மட்டை மாற்றித் தருகிறது. எடுத்துக் காட்டாக, ஐபேட், ஐபோன், எக்ஸ்பாக்ஸ், பி.எஸ் 3, ஆப்பிள் டிவி, பிளாக்பெரி, ஐரிவர் என சாதனங்களின் பெயர்களைக் கொடுத்தும் வீடியோ பைல்களின் பார்மட்டினை மாற்றிக் கொள்ளலாம்.எந்த பார்மட்டில் வெளியாக வேண்டுமோ, அதற்கான வீடியோ தன்மை, ரெசல்யூசன், கோடக் பைல் ஆகியவற்றையும் தேர்ந்தெடுக்கலாம். இவை அனைத்தையும் முடித்த பின்னர்,இறுதி பட்டன் அழுத்தி, மாற்றம் மேற்கொள்ள கட்டளை இடலாம். நாம் பயன்படுத்தும் கம்ப்யூட்டரின் செயல் வேகத்திற்கிணங்க, வீடியோ பார்மட் மாற்றம் ஏற்படுத்தப்படும். இந்த புரோகிராமின் சிறப்பு, வீடியோ பைல் பார்மட்டுகள் குறித்து அவ்வளவாக அறியாதவர்கள் கூட இந்த புரோகிராம் மூலம் தங்கள் வீடியோ பைல்களை மாற்றிக் கொள்ளலாம். அந்த அளவிற்கு எளிமையான வழி நடத்துதல் தரப்பட்டுள்ளன.இதனை இலவசமாக டவுண்லோட் செய்திட http://videoconverter.hamstersoft.com/ என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்ல வேண்டும். விண்டோஸ் இயக்கத்தில் 32 பிட் மற்றும் 64 பிட் இயக்கத்திற்கான தனித்தனி புரோகிராம்கள் தரப்பட்டுள்ளன. விண்டோஸ் 7 இயக்கத்திற்கும் இணைவாக மாற்றத்தை மேற்கொள்ளலாம். அத்துடன் இந்த புரோகிராம் குறித்த் தகவல்கள் 40 மொழிகளில் கிடைக்கின்றன.

யாழ்தேவி yaaldevi jaffna part 2

jaffna மறக்க முடியுமா அந்த நாட்களை ?????

புலம்பெயர் வாழ்வு

ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2010

ஆடி அமாவாசை முழு நிலவின் மறுபக்கம்


காட்சிகள் யாவும் சாட்சிகளல்ல அவை மாயைகளாகவும் இருப்பதுண்டு. நிலா என்றுமே தேய்வதுமில்லை வளர்வதுமில்லை. ஆனால் தேய்ந்து வளர்வது போல்த் தோற்றமளிக்கிறது.

அவ்வாறே சூரியன் காலையில் எழுந்து பூமியைச் சுற்றி வட்டம் போடுவதில்லை ஆனால் அவ்வாறே புலப்படுகிறது. பூமிதான் தானும் சுற்றி சூரியனையும் சுற்றுகிறது. எல்லாமே நாங்கள் அனைத்தையும் எவ்வாறு எங்கிருந்து எப்போது? பார்க்கிறோம் உணர்கிறோம் என்பதைப் பொறுத்த தோற்ற மாயைகளே!. ஆய்வின்மையால் இந்த உலகில் பெரும்பாலானவை சரிவரப் புரிந்து கொள்ளப்படுவதில்லை. பாமரர் உணர்ச்சிவழி போகையில் மற்றவர்கள் ஆராயும் முனைப்பின்றி உலகாயுதப் போக்கில் முடிவுகளை எடுக்கின்றனர். ஏற்கனவே வேண்டிய அறிவுரைகள் எல்லாம் என்றோ வளர்ந்து விட்ட நமது தமிழ் இனத்தில் நிறைந்திருப்பதால் ஆராய்வின்மை தமிழரின் தேசியக் குறைபாடாகே தொடர்கிறது. கண்ணால் கண்டதும் பொய் காதாற் கேட்டதும் பொய் என்ற பழமொழியின் அர்த்தமே எதையுமே தோற்றமளிப்பதைப்போல் கேள்விப்படுவதைப் போல் அப்படியே எடுத்துக் கொள்ளாது தீர விசாரித்து ஆராய்ந்து அறிவார்ந்த முடிவை எடு என்பது தான். “மாதா - பிதா - குரு - தெய்வம்” என்பதும் ஆய்விற்குரிய ஒரு தத்துவார்த்த வரிசையாகும். இது ஒரு வகையில் ஆரோகணம் போல் உயர்வதாகவும் உள்ளது வேறொரு ரீதியில் அவரோகணம் போல் தாழ்வதாகவும் உள்ளது. தெரியவும் புரியவும் இலகுவான அன்னையை முன்னே வைத்து உணரக் கூட கடினமான கடவுளை இறுதியில் வைத்துள்ளமை இறங்குவரிசை என்றால் அறிவு ஞானம் என்று பாரக்கின்ற போது தெய்வமான கடவுளே அதி உயர்ந்தவர் எனபதால் இதே ஒழுங்கு ஏறு வரிசையாகிவிடுகிறது. இது தந்தை அன்னையைவிட அறிவார்ந்தவர் என்பதை காட்டுகிறது. முழு நிலவைப் போல் தெளிவாகத் தெரியும் இதமான குளிர்ந்த அரவனைப்பு அன்பு அன்னையினது. அமாவாசை போல் புலப்படாத ஆனால் யதார்த்த நிஜ அக்கறைநிறை கண்டிப்பு தந்தையினது. உணர்வு பூர்வமானவள் அன்னை. அறிவு பூர்வமானவர் தந்தை. ஞானத்தை சுட்டி எட்ட உதவுபவர் குரு. அந்தப் பரிபூணர ஞான ஒளிப் பிளம்பே இறை……மாதா - பிதா - குரு - தெய்வம். விலங்குகளும் இலகுவில் காணும் அரும் பொருள் அம்மா. விளங்கவும் கடினமான பரம் பொருள் கடவுள். இதயத்தை இதமாக வருடிபவள் அன்னை. வாரிசுகளின் மனதையும் சிந்தனையையும் செயல்களையும் பண்படுத்திச் செம்மைப்படுத்துபவர் தந்தை. அறிவைப் பெருக்குபவர் குரு. ஞானத்தை உணர்த்துபவர் ஆண்டவர். கண் காணும் முன்னறி தெய்வங்கள் பெற்றார். பின்னே அறியப்படும் அம்மை அப்பனே இறைவன். வயிற்றுப் பசியைப் போக்குபவள் தாய் என்றால் அறிவிற்குரிய அரிசியை ஆக்குபவர் தந்தை. உடல் உணர்வு சார்ந்தவள் தாய் என்றால் உள்ளம் அறிவு சார்ந்தவர் தந்தை. தாய் தெளிவாகத் தெரியும் சித்ரா பௌர்ணமியின் பக்கமென்றால் ஆடி அமாவாசை புரியப்பட வேண்டிய அதே முழ நிலவின் புலப்படாத மறு பக்கமாகும். பறுவம் என்றாலும் அமாவாசை என்றாலும் நிலா ஒன்று தான். இரவும் வரும் பகலும் வரும் நாள் என்பது ஒன்று தான். உறவும் வரும் பிரிவும் வரும் வாழ்க்கை ஒன்று தான். இரண்டும் ஒன்றே…… அனைத்தும் ஒன்றே. இந்தப் பிரபஞ்சம் முழுதும் நிறைந்திருக்கும் கதிரியக்க சக்திப் பெருங்கடல் ஒன்றே. அதனால்த் தான் “நீயே அது” என்கிறது அத்வைதம். நிற்க! இதமான குளிர்மையான அழகிய சித்ராப் பௌர்ணமி அன்னைக்கு. தெரியாத இருண்ட ஆடி அமாவாசை தந்தைக்கு. ஒளியும் இருளும் சேர்ந்ததே முழுமை. இன்ப துன்பத்தில் இன்பத்தை மட்டும் அனுபவித்தவன் அரை மனிதன். இன்பத்தோடு துன்பத்தையும் கடந்து களவையும் கற்று வந்தவனே முழு அனுபவஸ்தன். வெற்றியை மட்டும் கண்டு வந்தவன் அதிஷ்டசாலியாக இருக்கலாம். தோல்வியின் படிப்புப் படிகளிலும் ஏறி ஏறி மேலே வந்தவனே அறிவாளி. இதை எழுதும் உடலிற்கு கருவறையிலேயே உதிரம் தந்தவள் என் அன்னை. இதை எழுதும் இயலுமையைத் தந்தவர் பூக்கள் நிறைந்த ஏரிகளைக் கொண்ட தீப வம்சமும் குறிப்பிடும் பண்டைய நகரமான “பூ நகர ஏரியில்” (பூநகரில்) வாழ்ந்த சித்த ஆயுள் வேத அய்யன். எழுதக் கற்றுக் கொடுத்தவர் குரு. இப்படி எழுத வேண்டும் என்பதையே எழுதி வைத்தவன் ஆண்டவன். மாதா பிதா குரு தெய்வம் - இதில் உயர்ந்தது தாழ்ந்தது என்று எதுவுமில்லை. ஒன்றில்லாமல் மற்றதும் இல்லை. கவியரசு கண்ணதாசன் - அவன் பலரிற்கும் கால எல்லை கடந்த குரு. புவியரசுகளின் நில கால எல்லைகளையும் தாண்டியவன் கவிஞன். நாங்கள் இன்று தந்தையுடனேயே நிற்போம். பத்து வயதிலேயே பள்ளிக்காய் வீட்டைத் துறந்த எனக்கு தாய் போலவும் தோன்றியவர் என் தந்தையே. இன்று நாட்டையும் இழந்து கொண்டிருக்கையில் நமது இன்றைய கீரிமலை கனடா ஏரிக்கரையே. ஏங்களிற் பலர் நமது தந்தையரை தவறவிட்ட பின்னரே புரிந்து கொள்ள ஆரம்பிக்கிறோம். நாமும் தவறிவிட்ட பிறகே இறையின் துறைக்குள் நுழைகிறோம். தாயின் தயவை பிறக்க முன் கருவறையிலேயே உணர்கிறோம். எங்களிற்காக அடி வயிற்றில் நாமிருந்த போதே நமக்காக அன்றே சுவாசித்ததுடன் உதிரம் தந்தவள் தாய். . ஆம் ஜனனத்திற்கும் முந்திய தெரிதல் அனனை. மரணத்தின் பின்னான புரிதல் கடவுள். இரண்டிற்கும் நடுவே 40 வயதிற்கு பின்னான புரிதல் தந்தை. ஜனனம் நிறைவடையும் போதாவது தெரிபவர் தந்தை. மறைவு அது ஒரு முடிவல்ல.- அது அடுத்த சுற்றிக்கான ஆரம்பம். அஸ்தமனம் முடிவென்றால் மேற்கில் மறையும் சூரியன் மறுநாள் எழுந்திருக்கவே முடியாது. கீழே விழும் விதை முளைக்கவும் இயலாது. எனவே மரணம் ஒரு முடிவுப் புள்ளி அல்ல - அடுத்த மாற்றத்திற்கான ஆரம்பப்புள்ளியும் அதுவே. ஒரு புறத்தில் முடிவு அடுத்த பக்கத்தின் தொடக்கம். இங்கே கனடாவில் மரணத்துடன் ஒரு உரையாடலையே எழுதியுள்ளார் அறிவு சால் யோகாச்சார்யா அவர்கள். அதைக் கிட்டும் போது வாசிக்கலாம் என்று தொடாது வைத்துள்ள பலரில் நானும் ஒருவன். ஏதோ இன்னும் வயதாகிவிடவில்லை என்ற நினைப்பு எங்களிற்கு. மனித வாழ்க்கை என்பதே ஒரு வகையில் மரணத்தை நோக்கிய பயணம் தான் என்பதை உண்ரந்தவர்கள் மரணத்தை இப்படித்தான் பார்ப்பார்களோ என்னமோ! அதனால்த் தான் எத்திசையில் ஓடுகிறோம் என்பதைத் ஆராயாது நாம் “கேக்” வெட்டி கொண்டாடுகிறோம் நமது பிறந்த நாளை … ஒரு பூவானது பிஞ்சாகிக் காயாகி கனியாகி உதிர்வது ஒரு முடிவு தான் என்றாலும் அதுவே இன்னொன்றின் ஆரம்பப் புள்ளியாகிவிடுகிறது. அது ஒரு சுற்றின் தற்காலிக முடிவே ஒழிய அதுவே அடுத்த சுழல்வின் தொடக்கம். பிறவிப் பெருங்கடலில் அது ஒரு நிலைமாற்றமே. ஆனால் நாங்களோ அதற்காக அழுகிறோம். ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ? பழுதடைந்த சட்டயை நாம் வீசி அடுத்த புதிய சட்டையை அணிந்தே ஆக வேண்டும் அதுவும் பழையதாகும் வரை…..ஓ! என்னதான் தத்துவம் பேசினாலும் இந்தப் பிரிவுத் துயர் இருக்கிறதே அது கொடுமையானது. அது யாரையும் விட்டு வைப்பது இல்லை. பட்டினத்தாரே பாடி அழதாரே அன்னையை இழந்த போது……. இரவும் பகலும் வரும் வாழ்க்கை ஏதோ ஒன்று தான். உறவும் வரும் பிரிவும் வரும் ஆனால் நான் ஒருவன் தான் ஏகத்துள் அநேகம் - ஜீவாத்மா அநேகத்தையெல்லாம் உள்ளடக்கிய ஏகம் - பரமாத்மா. ஜீவாத்மாவே பரமாத்மா…அதனால் நீயே அது! கீரிமலைத் துளி நீரும் பூகோள சமுத்திர ஜலமும் ஒன்றே. காற்றுக்கேது தோட்டக்காவல் போடி தங்கச்சி! கடலிற்கேது எல்லைக் கோடு? மண்ணில் தோன்றி அக்னியில் தோய்ந்து காற்றில் எழுந்து வின்னில் நிற்கும் அந்த ஆத்மாக்களிற்கு சமுத்திரத்தில் ஒரு கலப்பு. பஞ்ச பூதங்களின் ஐந்தொழிலையும் உருவகிக்கும் நாட்டிய தாண்டவப் பொன்னம்பலத்தானை நாளைய தினம் நாமும் அர்ச்சிப்போம் - நம் தந்தையரது மோட்சத்திற்காய். கீரிமலைக் கடலும் புலம் பெயர் தமிழர்களின் பூகோள சமுத்திரங்களும் ஒன்றே! இருளும் வரும் ஒளியும் வரும் நிலவு ஒன்று தான். பறுவமும் வரும் அமாவாசையும் வரும் நிலா ஒன்று தான். நிலா - அது தேய்வதும் இல்லை வளர்வதுமில்லை. பாருங்கள் சுற்றி ஆரம்பித்த இடத்திற்கே வந்து விட்டோம். இந்தச் சுற்றைக் காட்டும் வட்டந்தான் இந்தச் சிவ தாண்டவத்தை அடக்கி நிற்கும் பூஜ்ஜியத்தானின் இராஜ்ஜியத்தைக் காட்டும் வட்டமா? வாழ்க்கை என்பது ஒரு சக்கரமே. ஆதனால் தான் வரலாற்றையும் சக்கரமென்றார்கள் அன்றே. அன்று வாலி வதம் . இன்று புலி வதம் இரண்டுமே மறைந்திருந்து செய்யப்பட்ட போர்க் குற்றங்களே! “கிஸ்றி றிப்பீட்ஸ் இற்செல்வ்.” - ஆய்வாளர்கள் எதிர்வு கூற இதை விட என்ன கணிப்புச் சூத்திரம் தேவை? உயிரினம் சட உடலினதும் உயிரான ஆன்மாவினதும் கூட்டென்றால் இந்தக் உடலான கூட்டை விட்டு விலகும் ஆவி ……உயிர் எங்கே போகிறது? நம்மை விட்டுப் பிரிந்த நம் முன்னோரெல்லாம் எங்கே இருக்கிறார்கள்? ஆண்டுத் திவஜம் முடியும்வரை ஓராண்டு நம்மைச் சுற்றி வரும் அவர்களிற் பலர் பிறவிப் பயணத்தை தொடரலாம் அல்லது மேலெழுந்து ஈர்ப்பு சமநிலையுள்ள உயரத்தில் ஓய்வாக அசைவின்றி அமைதி அடையலாம். இருந்தாலும் இந்தத் சிரார்த்த திதிகள் போன்ற காலங்களில் பிதிர் தர்ப்பணங்களிற்கான தொடர்பு வாய்ப்புக்கள் அதிகம் என்கிறார்கள். ஆதற்கான விஞ்ஞான விளக்கத்தை பிறிதொரு சமயத்தில் பார்ப்போம். பெற்றவரோடு நாம் தொடர்பு கொள்ளக் கூடிய தினங்களே இந்த பறுவ அமாவாசைத் தினங்கள் என்கிறார்கள். நம்ப முடிகிறதோ இல்லையோ நாமும் நம் முன்னோர்க்கு நாளை ஒன்பதாம் தேதி திங்கட் கிழமை பிதிர் தர்ப்பணம் செய்வோமாக! ஓ! மானிடர்களே!! எல்லோரும் பிதிர் தர்ப்பணம் செய்வோமாக!!!.

சனி, 31 ஜூலை, 2010

எனது ஏக்கம் நிறைவேறுமா


நான் எனது காலில் வாழ ஆசைப்படுகிறேன் ஆனாலும்
அது முடியாத ஒன்றல்ல நான் இவ்வளவு காலமும்எனது
மனச்சாட்சியிடம் கேட்டதெல்லாம் நான் நானாக இதுவரை
வாழவில்லை இனிமேலும் நான் நானாக வாழமுடியுமா
கேட்ட நொடியில் மனசாட்சி என்னைப்பார்த்து சிரித்தது
ஏய் மானிடா பரிதாபத்துக்குரிய இளைஞ்சனே நீ
நீயாக வாழ ஆசைகொண்டாய் அது உனது விருப்பம்
அதனை நினைத்து நீ வெட்கம் கொண்டது உனக்கு
சரிஎனப்பட்டாலும் நான் அதனை ஏற்று கொள்ளமாட்டேன்
காரணம் சொல்வேன் கொஞ்சம் பொறு

நீ ஒருவன் மட்டும் பிறர் கையில் வாழவில்லை
இந்த நாட்டின் ஒவ்வொருவனும் அப்படித்தானே வாழ்கின்றான்
அது உன்னுடையதும் மற்றோறதும் விருப்பமுமல்ல
உங்களுக்குள்ளே நீங்களாய் தேடிகொண்டது என்றபோது
நான் மனச்சாட்சியிடம் கோபம் கொண்டேன்
அப்போது என்னை பார்த்த மனச்சாட்சி
பொறு பொறு கோபம் கொள்ளாதே இதற்கும் நான்
பதில் சொல்கிறேன்

முதலில் நீ பெண் நான் ஆண் என்ற மமதை சண்டையும் பின்பு
நான் உயர்ந்தவன் நீ தாழ்ந்தவன் என்ற ஏற்ற சண்டையும்
பின்பு நான் நல்ல சாதி நீ கெட்ட சாதி என்ற சாதிச்சண்டையும்
பின்னர் நீ சிறுபாண்மை நாங்கள் பெரும்பான்மையர் என்ற போது
உண்டான சண்டையும் பின்பு நீ தமிழன் நான் சிங்களவன் என்ற
இனத்தால் உருவான பகை சண்டையும் பிறகு உனக்கு கால் நிலம்
எனக்கு முக்கால் நிலம் என்ற நிலத்துக்கான சண்டையும்
இன்று எதைக்கேட்பது எதை கேட்காமல் இருப்பது என்ற நிலைமாறி
எதைக்கொடுத்தாலும் போதும் என்ற பிச்சை கெஞ்சலுமாய்
மாறிய மானிடனே இந்த ஆசை அனைத்தையும் அன்றே துறந்திருந்தால்
உன்னைப்போல் ஒருவன் அல்ல ஆயிரம் ஆயிரம்
ilaiya samuthayaththukkum இந்த kelvi manathai thoddurukkathu
irunthum unnul irukkum ullakkumuralkalai erimalaikalaai aakkathu
uyir malaikalaai matta aasaippadu anthakkanamee nee veesiya kelvi kanaaikalukkellam vidai kidaikkum nee pirar miithu thanki valntha padchonthi
vaalvukkum pirar unnai unnai oru sompori enru partha parvaikkum
vidai kidaikkum ivvalavu kalamum iruntha intha valvu unnodu pokaddum
melum vaala asaippadu mindum pirar kai nampiyalla than kaiyee thanakku
uthavi enra unmaiyudan vaalnthu kaddu antha nimidamee neeyum valvaai piraraiyum vaala vaippaai unn vaalkkaikkul iruntha oddaikalai unn ulaippodu
unathu moochaka eduththu adaikkappar un kadantha kala valikalukku
ellam sirantha ovuddatham unnul varaththudikkum ippothu meendum unn vadukkalin muthal iru varikalai meedippar
thanakkai valpavan valvathe kedu
pirarkkai valvathu athuve peru

தனக்காய் வாழ்பவன் வாழ்வதே கேடு
பிறர்க்காய் வாழ்வது அதுவே பேறு
நான் எனக்காய் வாழ ஆசை கொண்டும்
பிறர் துணையோடு வாழும் கேடும் கொண்டேன்
மிடுக்காய் நான் பிறர் முன் வாழ்ந்த
வாழ்க்கை என்பது enn valkai அல்ல

என்தாயின் கரு வறையில் நான் கரு கொண்டு
சீர் மிகு உலகில் வெளிவரும் வரையும் என் தாயின்
துணை கொண்டும் - பின்பு நான் தத்தி தாவி விளையாடும்
பருவம் வரை தாய் தந்தை என ஈருரவு தாங்கிய வாழ்வும்
பின்பு பள்ளிப்பருவம் முதல் காளைப்பருவம்வரை தந்தை தாய்
சகோதரர் என மூவர் துணையோடு வாழ்ந்த வாழ்வும்
காளைப்பருவம் கடந்து கல்யாணப்பருவம் கண்டு துணையோடு
சேரும் வரை பிறர்க்கு தெரியாமல் என் வாழ்க்கை என காட்டியதும்
என்னோட வாழ்க்கை அல்ல
இதுவரை நான் பிறர் கையில் தங்கி வாழ்ந்து மற்றவர் முன் வெளி
வேசம் கொண்டேன்
ஆனாலும் மனச்சாட்சியிடம் சொல்ல முடியுமா நானாக வளர்ந்தேன் என்று
சொன்னாலும் நான் வாழ்ந்தது வாழ்வா இனிமேலும் என்னால் எனது





சனி, 24 ஜூலை, 2010

தமிழ் கவிதைகள்



அம்மா என்று ஒரு உயிர்
என்னை படைத்த அம்மா
உன் படைப்பின் பொருளை இன்று
தான்அறிந்தேன் அம்மா
என்னை பெற்ற போது உனக்குள் வலியை கண்டாய்
நீ இல்லாத போது என்னுள் அதன் உண்மை கண்டேன்

அன்று உன் அக அறையில் என்னை சுமந்தாய்
இன்று என் மன அறையில் உன்னை சுமந்தேன்
அன்று என்னை நீ கண்டாய் உன் மகவாய்
இன்று நான் உன்னை தேடுகின்றேன் தனியாய்
என்றும் நீ என்னுள் வாழ்வாய்
அம்மா என்ற என் உறவாய்