



பத்தாம் நாளில் நடைபெற்ற விழாவின் படங்களை இன்று தரலாம் என நினைக்கின்றேன் எல்லோருக்கும் நல்லூர் கந்தனின் அருள் கிடைக்கட்டும் .
பதினோராம் நாளில் சந்திப்போம்






நல்லூர் விழாக் காலப் பதிவுகளில் இன்றைய படையலாக வருவது சிவயோக சுவாமிகளின் இரண்டு நற்சிந்தனைப் பாடல்களின் ஒலி வடிவமும், அவற்றின் எழுத்து வடிவமும். "எந்நாளும் நல்லூரை" என்ற பாடலைத் தாங்கிய இசைப் பேழை யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் சிவதொண்டன் நிலையத்தினரால் வெளியிடப்பட்டது. இப்பாடலை உருவாக்கியதோடு தகுந்த சங்கீத இலட்சணமும் கொடுத்தவர் சிவயோக சுவாமிகள். எளிமையான வரிகளில் வலிமையான பக்தியுணர்வைத் தூண்டும் இப்பாடல் நல்லூர் நாயகன் திருவிழாக் காலத்தில் உங்களுக்கும் அவன் பால் சித்தத்தைக் கொண்டு செல்ல உறுதுணையாக அமையும்.
ஈழ நல்லூர் கந்தசுவாமி கோயில் மகோறசவ நிகழ்வுகள் இன்றிலிருந்து அடுத்த 25 நாட்கள் இடம்பெற இருக்கின்றன. இன்று makkal நமது ாழ்வில் மிகவும் ஆறுதல் கிடைக்குமா என்று ஏங்கி தவித்து கொண்டு இருக்கிறார்கள் இன்று நாடு அமைதியுடன் இருப்பதாக உலகம் நினைத்து கொண்டு இருந்தாலும் தமிழ் மக்கள் வாழ்வில் அது மிகவும் தூரமாக தான் உள்ளது காரணம் நீண்ட கொடிய போரினால் ஆயிர கணக்கான மக்கள் தமது சொந்தம் சுகம் வீடு என்ற சகலதையும் இழந்து தவித்துக்கொண்டு இருக்கிறார்கள் இவ்வளவும் அற்ற நேரத்தில் எல்லாம் வல்ல எம்பெருமானின் அருள் கிடைத்து நம் எல்லோர் வாழ்விலும் சாந்தியும் சமாதானமும் நிலவ வேண்டிப் பிரார்த்தித்து தினம் ஒரு கந்தப் பெருமான் பாடலை வழங்கலாம் என்றிருக்கின்றேன். எல்லாம் ஆண்டவன் சித்தம். பிரம்மஸ்ரீ ந.வீரமணி ஐயர் யாத்த "நல்லை முருகன்" பாடலை, மோகன்ராஜ் இசையமைப்பில் ரகுநாதன் பாடுகின்ர்றார் 
கூகுள், தன் வாடிக்கையாளர்களுக்கு, போட்டோக்களைப் பதிந்து வைத்திட இடம் தருவதிலும், தனக்கென ஒரு தனி வழியைக் கையாண்டு வருகிறது. ஜி போட்டோ ஸ்பேஸ் எனத் தனியே ஒரு வசதியினை இதற்கெனத் தருகிறது. பயர்பாக்ஸ் பயன்படுத்துபவர்கள் இந்த வசதியைப் பயன்படுத்த, ஓர் ஆட் ஆன் தொகுப்பு தரப்பட்டுள்ளது.போட்டோக்களை இணைய தளத்தில் வைத்து பாதுகாப்பது இன்று பரவலாகப் பலரும் பயன்படுத்தும் ஒரு வசதியாக மாறி வருகிறது. பல இணைய தளங்கள் போட்டி போட்டுக் கொண்டு இதற்கான வசதிகளைச் செய்து வருகின்றன. போட்டோக்களை அனைவரும் காணும் வகையிலோ அல்லது குறிப்பிட்ட சிலர் மட்டும் காணும் வகையிலோ பதிந்து வைக்கலாம். ஒவ்வொருவருக்கும் போட்டோக்களைப் பதிய தரப்படும் டிஸ்க் இடம், தளத்திற்கு தளம் மாறுபடுகிறது. ஜிமெயில் அக்கவுண்ட் உள்ளவர்கள் அனைவரும், கூகுள் தரும் ஜி போட்டோ ஸ்பேஸ் பகுதியினையும் பயன்படுத்தலாம். உங்களுக்கு போட்டோக்களை ஆன்லைனில் அனுப்புவதில் சிக்கல்களை எதிர் கொள்கிறீர்களா? அப்லோட் செய்வதில் பெரிய அளவில் பிரச்னைகளைச் சந்திக்கிறீர்களா? சேமிக்கும் இடம் அதிகமாக உங்களுக்கு வேண்டுமா? அதற்காக நீங்கள் பயன்படுத்தும் தளம் கூடுதல் கட்டணம் கேட்கிறதா? உங்கள் தனி நபர் சுதந்திரம் இந்த வகையில் பாதிக்கப்படுகிறதா?அப்படியானால், நீங்கள் கூகுள் தரும் ஜிபோட்டோ ஸ்பேஸ் பயன்படுத்தத் தொடங்கலாம். கூகுள் தரும் கூடுதல் வசதிகளையும், அதற்கான பயர்பாக்ஸ் ஆட் தொகுப்பு குறித்தும் இங்கு காணலாம். கூகுள் தரும் ஜிபோட்டோ ஸ்பேஸ் வசதிக்கு எந்த நிலையிலும் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை.பயர்பாக்ஸ் எக்ஸ்டன்ஷன் மூலம் 50 போட்டோக்களை ஒரு தொகுப்பாக அப்லோட் செய்திடலாம். மற்ற எந்த இணைய அப்லோடிங் வசதியைக் காட்டிலும், இது ஐந்து மடங்கு வேகத்தில் அப்லோட் செய்கிறது.பல தளங்கள், குறைந்த அளவே போட்டோக்களை சேமிக்க இடம் தருகின்றன. ஜிபோட்டோ ஸ்பேஸ் இதற்கென வரையறையை விதிக்கவில்லை. ஜிமெயிலுக்கு ஒதுக்கப்படும் 7 ஜிபி மற்றும் கூடுதல் இடம் தரத் தயாராய் உள்ளது. இணைய தளத்தில் பதிக்கப்படும் போட்டோக்களை மற்றவர்கள் பகிர்ந்து பார்ப்பதன் மூலம், உலகம் முழுவதும் உள்ள மக்கள் பார்த்துவிடுவார்களோ என்ற அச்சம் இருந்தால், ஜிபோட்டோ ஸ்பேஸ் அதனைத் தீர்க்கிறது. நீங்கள் உங்கள் தனிநபர் உரிமையை 100% பாதுகாத்துக் கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கும் தகவல்களுக்கும் http://www.gphotospace.com/features.html என்ற முகவரியில் உள்ள தளத்தினைப் பார்க்கவும். நன்றி தினமலர்
இலங்கையின் தலைநகரில் தமிழர் பெரும்பான்மையாக வாழும் வெள்ளவத்தையில் கோவில் கொண்டிருக்கும் அன்னை மயூராபதி அம்மனின் ஆலய இரதோட்சவம்இன்று காலையில்வெகு விமர்சையாக நடைபெற்றது ஈழ மக்களுக்கெல்லாம்அன்னையவளின்அருள்கடாட்சம்கிடைக்கஅன்னையவளின் திருவடியினை பணிவோமாக
இலங்கை திருநாட்டில் உள்ள மக்கள் தாம் தாம் சார்ந்த மதங்கள் மீது மிகுந்த பற்று கொண்டவர்கள் சாதாரண வழிபாடுகள் என்றாலும் சரி பெரியளவான உற்சவம் என்றாலும் அந்த நேரம் தம்மை முழுதாக இறைவன் மீது உட்புகுத்தி தமது வேண்டுதல்களை மிகவும் சிறப்பாக கடைப்பிடிப்பார்கள்



