பக்கங்கள்

வியாழன், 16 செப்டம்பர், 2010

ஆல்பம் டிசைன் செய்யும் தளம் ஒரு அறிமுகம்

நான் இதுவரை பதிவிட்ட சிறந்த சாப்ட்வேரில் இதுவும் சேரும் என எண்ணுகின்றேன். இதை உபயோகிக்கும் போதே இதன் அருமை தெரிகின்றது.போட்டோ ஸ்டுடியோ வைத்திருக்கும் நண்பர்கள் ஒருதிருமண ஆல்பம் டிசைன் செய்ய எவ்வளவு நேரம் செலவிடுகின்றார்கள் தெரியுமா...? ஆனால் இந்த சாப்ட்வேர் நேரத்தை பெருமளவு குறைத்து நமக்கு வேலையை சுலபமாக்கி விடுகின்றது.இதனை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.உங்கள் கம்யூட்டரில் இதை இன்ஸ்டால் செய்து ஓப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் மேல்புறம் கீழ்கண்ட வாறு இருக்கும்.
இதில் முதலில் உள்ள New (பச்சை நிற பெட்டி)கிளிக் செய்து உங்கள் கம்யூட்டரில் உள்ள புகைப்படத்தை தேர்ந்தேடுங்கள். இப்போது உங்களுக்கு கீழ்கண்டவாறு விண்டோ வரும்.
இதில் வலதுபுறம் உங்களுக்கு Girl.Baby.Love,Simulation,Dream,Magazine,Cloth,Frame & Other என கீழ்கண் டபெட்டிகள் இருக்கும் .இதில் தேவையானதை கிளிக் செய்யுங்கள்.
ஒவ்வொரு வகையிலும் குறைந்தது 30 டிசைன்கள் உள்ளது. உங்களுக்கு தேவையான டிசைன் மீது கர்சரால் கிளிக் செய்து டிசைனை தேர்வு செய்யுங்கள்.,இப்போழுது உங்களுக்கு கீழ்கண்டவாறு விண்டோ தோன்றும்.
இத்துடன் ஒரு சிறிய விண்டோவும் தோன்றும். கீழே உள்ள படத்தை பாருங்கள்.
ஒரு ஆல்பத்தில் மூன்று விண்டோகள் இருப்பதாக வைத்துக்கொள்ளுவோம்.நாம் ஒவ்வோரு விண்டோவிற்கும் வெவ்வேறு படங்களை வைததுக்கொள்ளலாம்.மீண்டும் கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இதில் வெவ்வேறு படங்களான குருவி,பாலம்,அல்லி மலர் இணைத்துள்ளேன்.அதுபோல நீங்கள் எந்த விண்டோவில் படத்தை வைக்க விரும்புகின்றீர்களோ அந்த விண்டோவினை கிளிக் செய்யுங்கள். இப்போது மீண்டும் சின்ன விண்டோவினை பாருங்கள்.அதிலும் உள்ள பச்சை பெட்டி(New)கிளிக் செய்து உங்களுக்கு தேவையான புகைப்படத்தை தேர்வு செய்யுங்கள்.படத்தின் ப்ரிவியு பாருங்கள். விண்டோவில் படம் நடுவில் இல்லாமல் சற்று முன்னும் பின்னுமாக உள்ளதா..? இப்போது மீண்டும் சின்ன விண்டோவில் உள்ள சிகப்பு கட்டத்தை நகர்ததுங்கள். இப்போது விண்டோவில் படம் நடுவில் வந்துவிடும்.இப்போது நியு (பச்சை பெட்டிக்கு)க்கு அடுத்து மூன்று பொம்மை படங்கள். இருக்கும். இது எதற்கு பயன் படுகின்றது என்றால் நாம் புகைப்படத்தை கருப்பு வெள்ளையாகவோ - பழைய காலத்து போட்டோவாகவோ - பென் சில புகைப்படமாகவோ மாற்றிக் கொள்ளலாம்.ஒவ்வொரு பொம்மைபடத்திற்கும் ஒவ்வோரு டிசைன் உருவாகும்.கீழே உள்ள புகைப்படத்தை பாருங்கள்.
வெவ்வேறு டிசைனில்செய்த புகைப்படங்கள் கீழே:-






சரி ...ஆல்பம் தயார் செய்துவிட்டோம். இப்போது இதில் மொத்தமாக மாற்றவேண்டும்.மாறுதல்கள் செய்யவேண்டும்.மீண்டும் மேலே வாருங்கள்.கீழ்கண்ட விண்டோவினில் தேவையான மாற்றங்கள் செய்துகொள்ளுங்கள்.
படத்தை சேமிப்பதோ - கலர் மாற்றுவதோ - அ ளவுகளை மாற்றம் செய்வதோ - எதுவேண்டுமானாலும் செய்து இறுதியில் சேமித்துக்கொள்ளுங்கள்.பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.ஒருமுறை பதிவினை படித்துப்பாருங்கள். பின்னர் இந்த சாப்ட்வேரை உபயோகித்துப்பாருங்கள். சந்தேகம் வரும் பட்சத்தில் மீண்டும் இந்த பதிவினை படியுங்கள்.அப்படியும் உங்களுக்கு சந்தேகம் வந்தால் கருத்துரையில் கேளுங்கள்.பதில் அளிக்கி்ன்றேன்.

நன்றி
வேலன் அண்ணா

வெள்ளி, 10 செப்டம்பர், 2010

தேர் உற்சவம் -இருபத்திமூன்றாம் திருவிழா


பாகம் ஒன்று


பாகம் இரண்டு


பாகம் மூன்று
நல்லூர் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா நேற்று செவ்வாய்க்கிழமை காலை பக்திபூர்வமாக நடைபெற்றது. நேற்று அதிகாலை விசேட கொடித்தம்பப் பூசை கள் இடம்பெற்றமையை அடுத்து 6.30 மணிக்கு வசந்த மண்டபப் பூசை நடைபெற்றது. பின்னர் முரு கப் பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராக வரலாறு காணாத பக்தர் வெள்ளத்தில் தேர் ஏறி பவனி வந்தான் நல்லூர்க் கந்தன்

நல்லூர் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா நேற்று செவ்வாய்க்கிழமை காலை பக்திபூர்வமாக நடைபெற்றது.
நேற்று அதிகாலை விசேட கொடித்தம்பப் பூசை கள் இடம்பெற்றமையை அடுத்து 6.30 மணிக்கு வசந்த மண்டபப் பூசை நடைபெற்றது. பின்னர் முரு கப் பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராகத் தேருக்கு எழுந்தருளினார். அதைத் தொடர்ந்து பக்தர்களின் அரோஹரா கோஷம் ஒலிக்க காலை 7.15 மணிக்கு தேருலா ஆரம்பமானது.
கடந்த காலங்களை விட மிகக் கூடுதலான மக்கள் இம்முறை தேர்த்திருவிழவில் கலந்துகொண்டனர். ஏறக்குறைய ஒரு லட்சம் பேர்வரை நேற்றைய உற்சவத்தில் கலந்துகொண்டனர் எனத் தெரிகின்றது.
எனினும், வழமையான உற்சவ தினங்களில் கலந்துகொண்ட அளவுக்கு இம்முறை தேரின்போது மிகவும் கூடுதலான தென்பகுதி மக்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டபோதும் நேற்றைய தேர்த்திருவிழாவின்போது மிகவும் குறைந்த மக்களே தென்பகுதியில் இருந்து கலந்துகொண்டனர். புலம் பெயர்ந்த நாடுகளைச் சேர்ந்த தமிழ் மக்களையும் காணக்கூடியதாக இருந்தது.
பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டமையால் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் தொண்டர்களும் சுறுசுறுப்பாக இயங்கியதையும் அவதானிக்கக்கூடியதாக இருந்தது.
தொலைக்காட்சிகளின் நேரடி அஞ்சல் நிகழ்வுகளும் இடம்பெற்றன. சுகாதாரம் , குடிதண்ணீர் வசதிகள் மாநகரசபையால் கண்காணிக்கப்பட்டதுடன் மாநகரசபை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் கண்காணிப்புக்கு உணவகங்களும் உட்படுத்தப்பட்டன.
தூக்குக்காவடி, காவடி மற்றும் அங்கப் பிரதிஷ்டை, அடியளித்தல் ஆகிய நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவதில் பக்தர்கள் அக்கறை கொண்டிருந்தனர். தேர் இருப்புக்கு வந்ததை அடுத்து பறவைக்காவடிகள் வந்தவண்ணம் இருந்தன

இருபத்திநான்காம் திருநாளில் சந்திப்போம்

புதன், 8 செப்டம்பர், 2010

இருபத்திரண்டாம் திருநாள் - சப்பறத்திருவிழா

இன்றைய சப்பரத்திருவிளாவிலும் தொடர்ந்து நடைபெற்ற தேர் மகொட்சவத்திலும் எனக்கும் கலந்து கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்தபடியால் பெரிதாக ஒன்றும் வழங்க முடியவில்லை . சப்பறத்திருவிளாவில் என்னால் எடுக்கப்பட்ட நிகழ்வின் ஒருசில நிமிட நிகழ்வின் தொகுப்பை வழங்கலாம் என்று உள்ளேன் .







இருபத்து மூன்றாம் நாளில் சந்திப்போம்

சனி, 4 செப்டம்பர், 2010

இருபத்தொராம் திருவிழா - வள்ளி திருமணம் -பகுதி -8


இன்றுடன் இந்த வள்ளி திருமணம் வில்லுப்பாட்டின் நிறைவுப் பகுதிக்கு வந்துள்ளோம் இன்று வரை என்னுடன் இந்த தொகுப்பில் ஒன்றினைந்த சகல உள்ளங்களுக்கும் நன்றி தெரிவிப்பதோடு இந்த தொகுப்பினை தந்து நல்கிய யூ டியுப் இணையத்துக்கும் அதனை தொகுத்தளித்த மீண்டும் எனது இந்த பகுதியில் இடம்பெறச்செய்த முன்னாள் தொகுப்பாளருக்கும் நன்றியுடனும் மேலும் இந்த வில்லுப்பாட்டின் நாயகன் ஐயா சோம காந்தா அவர்களுக்கும் அவர்தம் குழுவினருக்கும் இந்த நாள் வரை இதனை கண்டு களித்த ஒவ்வொரு நல்ல உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்து எல்லா மக்களுக்கும் நல்லூர் கந்தனின் திருவருள் கிடைக்க வேண்டும் நாட்டில் இனியாவது சாந்தி சமாதனம் தொடர்ந்து நிலைப்பதொடு மீண்டும் இப்படிப்பட்ட நிகழ்வுகள் மருவி விடாமல் தொடர்ந்தும் இந்த ஈழ தேசத்தில் இதுபோன்ற கலைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இதுபோன்ற கலைகளை அழியாமல் பாதுகாப்பது ஒவ்வொருவருடைய கடமை என்ற முறையில் எல்லோரும் இணைந்து இதனை ஒரு கடமை என்ற வடிவில் செயல்படுவோமாக .
நன்றியுடன்
தயா
இருபத்திரண்டாம்
திருநாளில் சந்திப்போம்

வெள்ளி, 3 செப்டம்பர், 2010

நல்லூர் மஞ்சம் -இருபதாம் திருவிழா - வள்ளி திருமணம் - பகுதி -7




கந்தன் மஞ்சக் கந்தனை நாம் தொழுதிட
அஞ்சாது பகைவரை எதிகொள்வோம் . பஞ்சென பகைவன் ஓடிச்சென்று முருகா எம்மை காப்பாற்று நாம் செய்த பிழையை பொறுத்திடு என்று தஞ்சம் கொள்வதை காண்பாய் தமிழா - திரு மஞ்சம் ஏறிடும் கந்தனை நம் நெஞ்சம் நிறைய தொழுதிடுவோம் .

இருபத்தொராம் நாளில் சந்திப்போம்

சனி, 28 ஆகஸ்ட், 2010

பதினைந்தாம் திருவிழா -வள்ளி திருமணம் - வில்லுபாட்டு - S.S.Gujuji - நல்லூர் -பகுதி 2


பதினாறாம் திருவிழாவில் சந்திப்போம்

பதினான்காம் திருவிழா -வள்ளி திருமணம் - பகுதி 1

இன்றைய பதினான்காம் திருவிழாவில் இருந்து யாழ் . நல்லூர் ஸ்ரீ தேவி வில்லிசை குழுவினர் கனடாவின் சிவன் ஆலயத்தில் நடத்திய வில்லுப்பாட்டு நிகழ்வில் இருந்து முதலாவது பகுதியினை இன்றும் தொடர்ந்து ஏனைய பகுதிகளையும் ஒலி பரப்பலாம் என்று எண்ணியுள்ளேன் . பொதுவாக நம் தமிழ் மக்கள் ஆலயங்கள் மீதும் இறைவன் மீதும் மிகுந்த பற்று கொண்டவர்கள் . நாட்டில் இடம் பெற்ற யுத்தம் காரணமாக தமது நாடு ,சொந்தம்,வீடு, கோயில் என்று அனைத்தையும் இழந்து தனிமையாய் வேறு தேசம் சென்றாலும் தமது கலாச்சாரத்தையோ அல்லது பண்பாடுகளையோ விட்டு செல்லாதவர்களாக இன்றும் அதனை பின்பற்ற வேண்டும் என்ற பற்று இன்று வரை காணப்படுவதாகவே உள்ளது. தமிழர்கள் என்றும் கலையினை செவ்வன போற்றுபவர்கள் . இதற்கு இவ்வாறான நிகழ்வுகள் எடுத்துக்காட்டாய் உள்ளது. இது போன்ற பல நிகழ்வுகளை இன்றும் செம்மைப்படுத்தி வருகிறார்கள். எனக்கும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை பார்க்க என்றும் ஆசை உண்டு . இந்த நல்லூர் கந்தன் ஆலய நாட்களில் இந்த தொகுப்பினை செய்ய வேண்டும் என்ற ஆவலில் இதனை புகுத்தியுள்ளேன் . எல்லோருக்கும் எல்லாம் வல்ல அலங்காரக் கந்தனின் திருவுளம் கிடைக்க கந்தனை பிரார்த்திக்கிறேன் .




பதினைந்தாம் நாளில் சந்திப்போம்

வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010

பதின்மூன்றாம் திருவிழா - வள்ளி கல்யாணம்

இன்றைய திருவிழாவில் இந்தியாவைச் சேர்ந்த திரு.விஜயராகவச்சரியார் அவர்களின் வள்ளிகல்யானம் என்னும் இசையோடு கூடிய கதாப்பிரசங்கத்தில் இருந்து ஒரு பகுதியினை ஒலி வடிவத்தில் கேட்டு மகிழுங்கள் .


பதினான்காம் திருநாளில் சந்திப்போம்

வியாழன், 26 ஆகஸ்ட், 2010

பன்னிரண்டாம் திருவிழா -நற்சிந்தனைப் பாடல்கள்




இன்றைய திருவிழாப் பதிவில், சிவயோக சுவாமிகள் அருளிச் செய்த"நில்லடா நிலையிலென்று சொல்லுது" என்னும் தலைப்பில் அமைந்த நற்சிந்தனை பாடலை" வரிகள் மூலமாக தந்துள்ளேன் . பார்த்து மகிழுங்கள் என்றும் கந்தன் அருள் புரிவான் .

ஓம்நாம் நாமென்று ஒலிக்குது
ஞாதுருஞானம் போயோடி ஒளிக்குது

நமக்கு நாமே துணையென்று விழிக்குது
நாதாந்த முடியிலேறிக் குளிக்குது

வேதாந்தசித்தாந்தஞ் சமமென்று களிக்குது
மாதாபிதாவை மறவாதிருக்க மதிக்குது

மூதாதைமார் சொல்நெஞ்சில் மதிக்குது
சூதான வார்த்தைதன்னைத் தொலைக்குது

நில்லடா நிலையிலென்று சொல்லுது
நீயேநான் என்று சொல்லி வெல்லுது

உல்லாச மாயெங்குஞ் செல்லுது
உண்மை முழுதுமென்று சொல்லுது

நல்லூரில் செல்லப்பன் என்னப்பன்
நானவரைக் கேட்கும் விண்ணப்பம்

நன்றி: சிவயோக சுவாமிகள் அருளிச் செய்த நற்சிந்தனைப் பாடல்கள்

பதின்மூன்றாம் நாளில் சந்திப்போம்

புதன், 25 ஆகஸ்ட், 2010

பதினோராம் திருவிழா - செந்தமிழால் உந்தனுக்கு மாலை தொடுத்தேன்


இன்றைய பதினோராம் திருநாளில் எனது ஆசான் மதிப்புக்குரிய திரு. வர்ண ராமேஸ்வரன் அவர்களின் கந்தன் பாடல் தொகுப்பில் இருந்து அண்ணன் கானா பிரபா அவர்களின் புளொக்கரில் இருந்து தொகுக்கப்பட்ட நல்லூர் உற்சவத்தின் ஒரு சில தொகுப்புக்களை மீண்டும் இடை செருகி உள்ளேன் . நல்லூர் கந்தனின் திருவிழாவினை நானும் எனது ப்ளொக்கரில் சேர்க்க வேண்டும் என்ற ஆவலுடன் விரும்பியபோது சகோதரன் கானா பிரபா அவர்களின் ப்லோக்கரை பார்க்க கிடைத்தது அதுவே இந்த விருப்பம் . அலங்கார கந்தனின் அருள் தமிழீழ மக்கள் எல்லோருக்கும் கிடைக்கட்டும் . மீண்டும் பிரபா அண்ணனுக்கும் நன்றி தெரிவித்து மீண்டும் சந்திக்கிறேன் .


"செந்தமிழால் உந்தனுக்கு மாலை தொடுத்தேன் -
தமிழ்
தெய்வமான கந்தனே உன் வீதி படுத்தேன்
சிந்திடும் உன் புன்னகையைக் கண்டு ரசித்தேன்
நல்லைத் தேரடியில் வந்துனது காலில் விழுந்தேன்.

பாசமுடன் நான் அழைக்க நல்ல வழி காட்டு - உந்தன்
பத்தினிகளோடெனக்கு வந்து முகம் காட்டு
வாசலெங்கும் எரியுதையா உந்தன் விழி காட்டு
இப்போ வள்ளி தெய்வயானையுடன் என்ன விளையாட்டு.

நீயிருக்கும் வீதியிலே பேய்கள் இருக்காது
நல்லூர் வீடு தொழுவோர்களுக்கு துன்பம் இருக்காது
வாயிருக்கும் வரையுனையே பாடி ஆடுவேன் -தினம்
வாசலிலே வந்திருந்து உன்னை தேடுவேன்

சந்நிதியில் உந்தனது தேரை எரித்தார்கள் -தமிழ்
தந்தவனே எங்களுக்கு சாவை விதைத்தார்கள்
விண்ணதிரக் குண்டு மழை இன்று பொழிவார்கள் -எங்கள்
வேலவனே அன்னவர்கள் என்று விழுவார்கள்?

செந்தமிழால் உந்தனுக்கு மாலை தொடுத்தேன் - தமிழ்
தெய்வமான கந்தனே உன் வீதி படுத்தேன்
சிந்தி வரும் புன்னகையைக் கண்டு ரசித்தேன்
நல்லைத் தேரடியில் வந்துனது காலில் விழுந்தேன்"

பாடலை இயற்றியவர்: புதுவை இரத்தினதுரை
பாடியவர்: வர்ணராமேஸ்வரன்
இசை: இசைவாணர் கண்ணன்

பன்னிரண்டாம் திருநாளில் சந்திக்கிறேன்















பன்னிரண்டாம் திருநாளில் சந்திப்போம்
nanri

திங்கள், 23 ஆகஸ்ட், 2010

பத்தாம் திருவிழா





பத்தாம் நாளில் நடைபெற்ற விழாவின் படங்களை இன்று தரலாம் என நினைக்கின்றேன் எல்லோருக்கும் நல்லூர் கந்தனின் அருள் கிடைக்கட்டும் .


பதினோராம் நாளில் சந்திப்போம்

சனி, 21 ஆகஸ்ட், 2010

ஏழாம் எட்டாம் ஒன்பதாம் திருவிழா - நல்லூர் உற்சவ காலப் படங்கள்





இன்றைய ஆறாம் ஏழாம் திருவிழா நாள்களில் நல்லூர் உற்சவ காலத்தில் எடுக்கப்பட்ட போட்டோ பிரதிகளை போடலாம் என்று நினைத்தேன் . போர் ஓய்ந்து மக்கள் நிம்மதியுடன் சுவாமி தரிசனம் செய்வதை காண்கின்றிர்கள் இன்றைய காலத்தில் தமிழ் மக்கள் மட்டும் அல்லாது பிறமதத்தவர்கள் கூட கந்தனை தரிசனம் செய்ய கூடி இருக்கின்றார்கள் . பௌத்த மதத் துறவிகள் கூட இருப்பதை மேல் உள்ள படத்தில் காண்கின்றிர்கள் . ஆலய உற்சவ காலப் படங்களின் ஏனைய பிரதிகளை இன்னும் ஒரு நாளில் வழங்கலாம் என்று நினைக்கின்றேன் . உங்கள் எல்லோருக்கும் நல்லூர் கந்தனின் அருள் கிடைக்கட்டும்
PATHTHAAM THIRUNALIL SANTHIPPOM
நன்றி

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

ஆறாம் திருவிழா - ஈசனே நல்லூர் வாசனே


இன்றைய திருவிழாப் பதிவில் "ஈசனே நல்லூர் வாசனே" என்ற பாடல் இசைவடிவிலும் மறைந்த திருமதி நாகேஸ்வரி பிரம்மானந்தா அவர்கள் பாடக் கேட்கலாம். பல வருடங்களுக்கு வெளிவந்த இப்பாடலைப் பாடிய திருமதி நாகேஸ்வரி பிரம்மானந்தா, அவர் காலத்தில் "ஈழத்தின் சுப்புலஷ்மி" என்று சிறப்பிக்கப்பட்டாராம்.
ஈசனே நல்லூர் வாசனே
இனிய வேல் முருகா
உனை நம்பினேன் நான்
ஈசனே நல்லூர் வாசனே
பண்ணினேர் மொழியாய்
பாலசுப்ரமண்யா
என்னுடலம் எல்லாம்
நண்ணும் வண்ணம் வா வா
ஈசனே நல்லூர் வாசனே
இனிய வேல் முருகா
உனை நம்பினேன் வா வா
தாசனான யோகசுவாமிசாற்றும்
பாவைகேட்டுக் கிருபை கூர்ந்துவாட்டம் தீர்க்க
வா வா
நன்றி
ஏழாம் திருவிழாவில் சந்திப்போம்

வியாழன், 19 ஆகஸ்ட், 2010

ஐந்தாம் திருவிழா - கந்தா தமிழன் துயர் தீர்க்க ஓடிவா



பொதுவாக சினிமா பாடல்களில் தான் பொப்இசைப் பாடல்கள் வருவது உண்டு ஆனாலும் பக்தி பாடல்கள் பொப் இசையில் பக்திப் பாடல்கள் பாடப்படுவது குறைவென்றே சொல்ல முடியும் . அந்த வகையில் இலங்கையின் பொப் இசை சக்கரவர்த்தி என்று எல்லோராலும்

புதன், 18 ஆகஸ்ட், 2010

நாலாந் திருவிழா - வள்ளியை மணம் பிடித்த வேலவா


நான் கண்ட நல்லஊரை நல்லூரில் தேடுகின்றேன் போர் ஓய்ந்து இன்று அமைதி நிலவும் வேளையிது எல்லோர் வாயும் இதைத்தான் உச்சரிக்கிறது ஆனாலும் நல்லூர் முருகனை கண்டவர்கள் தமிழராய் சிலரும் அல்லாதோர் பலராய்அல்லவா இன்று இருக்கிறது ஒரு காலத்தில்கதிர்காமமும் இப்படித்தான் இருந்ததாக எனது அம்மா அப்பா சொன்னது நினைவில் தோன்றுகிறது எல்லோருக்கும் விளங்கும் என்று நினைக்கிறேன் ஆனாலும் ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன் நான் இந்த நேரத்தில் அரசியல் பேச வரவில்லை பக்திக்கு மதமும் இல்லை மொழியும் இல்லை என்றும் எங்கட அம்மா அப்பா சொன்னது நினைவில் உள்ளது அதற்காக அன்று அந்த கதிர்காம கந்தனை நாம் விட்டது போல மன்னிக்கவும் கந்தன் நம்மை விட்டானா இல்லாட்டி கயவர் நம்மை விடவில்லையா எல்லாம் இனி நம்மட கையில் தான் உள்ளது அந்த கந்தன் கையில் தான் உள்ளது கந்தா அருள் புரிவாய் நாலாம் நாளில் அடியவருக்கு காட்சி கொடுக்க ஓடி வருவாய் மால்மருகா இன்றைய நான்காம் நாள் திருவிழாவில் நமது ஈழம் தந்த கவிமகன் புதுவை இரத்தினதுரையின் கவி வரியில் உதித்த இந்த பாடலை பார்த்து மகிழுங்கள்
பாடியவர் எனது ஆசான் திரு . வர்ண ராமேஸ்வரன்
வானமரர் துயர் தீர்க்க வண்ண மயில் ஏறி நின்றாய்
தேனமுத வள்ளி தெய்வயானையுடன் கூடி நின்றாய்
நானழுத கண் மழையால் நல்லையெங்கும் வெள்ளமடா
நாயகனே எங்களுக்கு நல்ல வழி சொல்லனடா
வேல் முருகா...அருள் தா முருகா....வேல் முருகா...அருள் தா முருகா........மால் மருகா....நல்லை வாழ் முருகா...மால் மருகா....நல்லை வாழ் முருகா...வா முருகா....துயர் தீர் முருகா........மால் மருகா....நல்லை வாழ் முருகா...
நல்லையில் வாழ்கின்ற நாதனின் திருநாட்டில்
தொல்லைகள் குடியேறுமா.......
எல்லையில் இருந்தினியும் எறிகணையால்
எம்மைக் கொல்லுதல் அரங்கேறுமா.......
நல்லையில் வாழ்கின்ற நாதனின் திருநாட்டில்
தொல்லைகள் குடியேறுமா.......
(வேல் முருகா...அருள் தா முருகா....)
அசுரர் நிலைகள் முன்னர் எரியும் வரையில் நின்று
மலையில் சிரித்திட்ட வேலவா
அதர்மப் படைகள் இன்று எறியும் கணைகள் வென்று
புலிகள் உலவுகின்ற வேளை வா
தமிழைப் பிறப்பித்த வேலவாவிழிகள் திறந்திட்டு ஓடிவாதமிழைப் பிறப்பித்த வேலவாவிழிகள் திறந்திட்டு ஓடிவா
வேலவா நீ ஓடிவாவேலவா நீ ஓடிவா
நன்றி
ஐந்தாந் திருவிழாவில் சந்திக்கிறேன்

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

மூன்றாம் திருவிழா - உந்தன் அருள் வேண்டும்தா முருகா







நல்லைக் கந்தன் ஆலய மகோற்சவ காலப் பதிவுகளில் இன்று நல்லை முருகன் பாடல் ஒன்று ஒலியிலும், எழுத்திலுமாக வருகின்றது.

பாடலாசிரியர்: தாயகக் கவி புதுவை இரத்தினதுரைஇசை வழங்கியவர்: இசைவாணர் கண்ணன்பாடலைப் பாடுகின்றார்: இசைக்கலைமணி ஸ்ரீ

வர்ணராமேஸ்வரன்.
தேரடியில் காலையிலே நானழுத வேளையிலே
நீ திரும்பிப் பார்க்கவில்லை முருகா - உன்
காலடியில் நான் இருந்து கண் சொரிந்த போதினிலே
கண்டு மனமிரங்கவில்லை முருகா
கண் திறந்து பார்க்க வில்லை முருகா - என்னை
கண்டு மனமிரங்கவில்லை முருகா
நல்லை நகர் வீதியிலே நாளும் சென்று அழுபவர்க்கு
தொல்லை அற்று போகுமென்றார் முருகா - நான்
வெள்ளை மணல் மீதுருண்டு வேலவனே என்றழுதேன்
துள்ளி வந்து சேரலையே முருகா
வேரிழந்து கண்களிலே நீர் சொரிந்த வேளையிலே
வேறிடத்தில் நீ ஒளித்தாய் முருகா - நீ
ஏறி வந்த தேர் இருக்கு, இழுத்து வந்த வடம் இருக்கு
எங்கேயடா போய் ஒளித்தாய் முருகா
செந்தமிழால் வந்த குலம் நின்று களமாடுகையில்
உந்தன் அருள் வேண்டுமடா முருகா - நீ
வந்திருந்து பூச்சொரிந்தால் வாசலிலே கையசைத்தால்
வல்ல புலி வெல்லுமடா முருகா