பக்கங்கள்

சனி, 24 ஜூலை, 2010

தமிழ் கவிதைகள்அம்மா என்று ஒரு உயிர்
என்னை படைத்த அம்மா
உன் படைப்பின் பொருளை இன்று
தான்அறிந்தேன் அம்மா
என்னை பெற்ற போது உனக்குள் வலியை கண்டாய்
நீ இல்லாத போது என்னுள் அதன் உண்மை கண்டேன்

அன்று உன் அக அறையில் என்னை சுமந்தாய்
இன்று என் மன அறையில் உன்னை சுமந்தேன்
அன்று என்னை நீ கண்டாய் உன் மகவாய்
இன்று நான் உன்னை தேடுகின்றேன் தனியாய்
என்றும் நீ என்னுள் வாழ்வாய்
அம்மா என்ற என் உறவாய்