பக்கங்கள்

வெள்ளி, 10 செப்டம்பர், 2010

தேர் உற்சவம் -இருபத்திமூன்றாம் திருவிழா


பாகம் ஒன்று


பாகம் இரண்டு


பாகம் மூன்று
நல்லூர் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா நேற்று செவ்வாய்க்கிழமை காலை பக்திபூர்வமாக நடைபெற்றது. நேற்று அதிகாலை விசேட கொடித்தம்பப் பூசை கள் இடம்பெற்றமையை அடுத்து 6.30 மணிக்கு வசந்த மண்டபப் பூசை நடைபெற்றது. பின்னர் முரு கப் பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராக வரலாறு காணாத பக்தர் வெள்ளத்தில் தேர் ஏறி பவனி வந்தான் நல்லூர்க் கந்தன்

நல்லூர் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா நேற்று செவ்வாய்க்கிழமை காலை பக்திபூர்வமாக நடைபெற்றது.
நேற்று அதிகாலை விசேட கொடித்தம்பப் பூசை கள் இடம்பெற்றமையை அடுத்து 6.30 மணிக்கு வசந்த மண்டபப் பூசை நடைபெற்றது. பின்னர் முரு கப் பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராகத் தேருக்கு எழுந்தருளினார். அதைத் தொடர்ந்து பக்தர்களின் அரோஹரா கோஷம் ஒலிக்க காலை 7.15 மணிக்கு தேருலா ஆரம்பமானது.
கடந்த காலங்களை விட மிகக் கூடுதலான மக்கள் இம்முறை தேர்த்திருவிழவில் கலந்துகொண்டனர். ஏறக்குறைய ஒரு லட்சம் பேர்வரை நேற்றைய உற்சவத்தில் கலந்துகொண்டனர் எனத் தெரிகின்றது.
எனினும், வழமையான உற்சவ தினங்களில் கலந்துகொண்ட அளவுக்கு இம்முறை தேரின்போது மிகவும் கூடுதலான தென்பகுதி மக்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டபோதும் நேற்றைய தேர்த்திருவிழாவின்போது மிகவும் குறைந்த மக்களே தென்பகுதியில் இருந்து கலந்துகொண்டனர். புலம் பெயர்ந்த நாடுகளைச் சேர்ந்த தமிழ் மக்களையும் காணக்கூடியதாக இருந்தது.
பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டமையால் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் தொண்டர்களும் சுறுசுறுப்பாக இயங்கியதையும் அவதானிக்கக்கூடியதாக இருந்தது.
தொலைக்காட்சிகளின் நேரடி அஞ்சல் நிகழ்வுகளும் இடம்பெற்றன. சுகாதாரம் , குடிதண்ணீர் வசதிகள் மாநகரசபையால் கண்காணிக்கப்பட்டதுடன் மாநகரசபை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் கண்காணிப்புக்கு உணவகங்களும் உட்படுத்தப்பட்டன.
தூக்குக்காவடி, காவடி மற்றும் அங்கப் பிரதிஷ்டை, அடியளித்தல் ஆகிய நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவதில் பக்தர்கள் அக்கறை கொண்டிருந்தனர். தேர் இருப்புக்கு வந்ததை அடுத்து பறவைக்காவடிகள் வந்தவண்ணம் இருந்தன

இருபத்திநான்காம் திருநாளில் சந்திப்போம்