
இருமனம் சேர துடிக்கிறது இதுவே திருமணமாம் பலர் வாழ்வில் இருமனங்கள் சேராது துடிக்கிறதாம் வெறுமனமாய் .............
இரு உள்ளங்கள் புரியாது காதல் செய்து புரியாத உறவு கொண்டு
காதலர் தினம் அன்றே பிரிவது தான் இன்றைய காதலர் தினமாம்
லைலா மஜ்னு ,சாஜஹான் மும்தாஜ் ,கண்ணகி கோவலன் இவர்கள் அன்றைய காதலர்கள்... நிஜமான ஜோடிகள்...
இவர்கள் கொண்டாட வில்லை காதலர் தினம் ஏனென்றால் அவர்களின் இதயம் தம்முள்ளே புரிதல் கொண்டது ..
உண்மை காதலை உதட்டிலே காண்பதா ? இல்லை உள்
இதயத்தில் காண வேண்டும் - அன்று அவர்கள் கண்டார்கள்
காதலின் புனிதம் நிலைத்து கொண்டது இன்று இவர்கள் காண்பது இருட்டிலே காமம் கொண்டதாய் காதலர் தினம்
முதல் சந்திப்பில் தான் இன்றைய காதலர்க்கு., அவர்கள் காதல் வாழ்வின் முடிவு வரை .....
ஒ ! இளைய சமுதாயமே உன் வாழ்விலும் காதல் வேணுமா ?
செய்வோம் காதல் பெண் மீது அல்ல ,
உன்னை படைத்த தாயின்மீது
அல்லது தந்தை மீது,
இல்லையேல் உன் சமூகம் மீது ,
கருகி சோபை இழந்து நீ காணும் உன் தேசம் மீது ,
தெருவில் பிச்சை எடுக்கும் ஒன்றும் இல்லாத உன் போன்ற ஜீவன் மீது காதலித்து பார் ,,
உண்மை காதல் எதுவென்று அன்றே உன்னில் புரியும்..
அடுத்த தெரு சரோஜாவுக்கு உனது தாய் தந்தையின்
பணத்தை செலவு செய்வதை விட்டுவிட்டு உன்
சம்பாத்தியத்தில் ஒரு பைசாவாவது செலவளித்துப்பார் !
உன் உழைப்பின் வியர்வை துளிகள் தெரியும்!!
அந்த பணத்தில் உன் தாய்க்கு ஒரு கர்ச்சிப்பாவது கொடுத்துப்பார் !
உன் மீது தாய் காதல் கொள்வாள் !!
தமிழனாய் பிறந்த நமக்கு ஆங்கில காதல் வேண்டாம்
காதலர் தினமும் வேண்டாம் அன்றைய நாளை
ஒரு கல்லறை நாளாய் கொள்வோம் ஏனெனில்
காதல்கள் எல்லாம் அங்கே தான் உறக்கம் கொள்கிறது
காதல் கொள்வோம் காதல் கொள்வோம்
காமம் கொள்ளோம் காமம் கொள்ளோம்
இன்றைய நாளில் இருந்து உன்னுள் மாற்றம் கொள்
நாளைய பொழுது உன்மீது காதல் கொள்ளும் ............