பக்கங்கள்

திங்கள், 16 ஆகஸ்ட், 2010

இரண்டாம் திருவிழா - எந்நாளும் நல்லூரை வலம் வந்து தொழுதிடுவோம்

நல்லூர் விழாக் காலப் பதிவுகளில் இன்றைய படையலாக வருவது சிவயோக சுவாமிகளின் இரண்டு நற்சிந்தனைப் பாடல்களின் ஒலி வடிவமும், அவற்றின் எழுத்து வடிவமும். "எந்நாளும் நல்லூரை" என்ற பாடலைத் தாங்கிய இசைப் பேழை யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் சிவதொண்டன் நிலையத்தினரால் வெளியிடப்பட்டது. இப்பாடலை உருவாக்கியதோடு தகுந்த சங்கீத இலட்சணமும் கொடுத்தவர் சிவயோக சுவாமிகள். எளிமையான வரிகளில் வலிமையான பக்தியுணர்வைத் தூண்டும் இப்பாடல் நல்லூர் நாயகன் திருவிழாக் காலத்தில் உங்களுக்கும் அவன் பால் சித்தத்தைக் கொண்டு செல்ல உறுதுணையாக அமையும்.
ராகம்: பிலஹரிதாளம்: ரூபகம்பல்லவிஎந்நாளும்
நல்லூரை வலம் வந்துவணங்கினால்
இடர்கள் எல்லாம் போமேஅனுபல்லவிஅந்நாளில் ஆசான் அருந்தவஞ் செய்த இடம்அது ஆதலாலே அதிசயம் மெத்தவுண்டு(எந்நாளும் நல்லூரை வலம் வந்துவணங்கினால் இடர்கள் எல்லாம் போமே)
சரணம்
வேதாந்தம் சித்தாந்தம் கற்றதனால் என்னவேடிக்கைக் கதைகள் பேசினால் என்னவீதியில் வந்தொருக்கால் விழுந்து கும்பிட்டால்வில்லங்கம் எல்லாம் இல்லாமல் போமே(எந்நாளும் நல்லூரை வலம் வந்துவணங்கினால் இடர்கள் எல்லாம் போமே)சத்தியம், பொறுமை, சாந்தம், அடக்கம்நித்தியா நித்தியம் பெறினும் - நிபுணபக்தி செய் உத்தமர் பரவும் நல்லூரில்நித்தியம் வந்து பார்த்தால் முத்தி நிச்சயமே(எந்நாளும் நல்லூரை வலம் வந்துவணங்கினால் இடர்கள் எல்லாம் போமே)
மூன்றாம் திருவிழாவில் சந்திக்கிறேன்