பக்கங்கள்

வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

அடோப் ஃபிளாஷ் (1)- அறிமுகம்
ஏதாவது தொழிற்நுட்ப பதிவுகள் போடலாம் என்று இந்த பிரிவை ஆரம்பித்து 4 பதிவு போட்டுட்டேன். அப்புறம் என்ன பண்ணலாம்னு தெரியலை, நிறைய பேர் புதிய வெப்சைட்டுகள், அப்புறம் ஃபோட்டோஷாப் மற்ற விஷயங்கள்னு நிறைய மிகச்சிறப்பா எழுதிகொண்டு வராங்க.சரி புதுசா எதாவது எழுதனும்னு யோசிச்சேன். எனக்கு கொஞ்சம் ஃபிளாஷும் 3D அனிமேஷனும் தெரியும் (எல்லாம் சொந்தமா கற்றுக் கொண்டது). மேலும் தமிழில் இதுவரை யாரும் இவற்றை பற்றி எழுதியது போல் தெரியவில்லை. அதனால் நான் இனிமேல் இங்கே ஃபிளாஷை பற்றி நான் கற்றுக் கொண்டவை, படித்தவை பார்த்தவைகளை பற்றி தமிழில் எழுதப் போகிறேன்.தங்களுக்கு உபயோகமாக இருந்தால் மிகவும் சந்தோசப்படுவேன். பிடித்திருந்தால் கமெண்ட் செய்யுங்கள்.இது வரை என் பிளாகிற்கு வந்து விமர்சனம் அளிக்கும் அனைவருக்கும் மிக்க நன்றி!
நான் இங்கே தரப்போகும் அனைத்து விஷயங்களுமே அடோப் ஃபிளாஷ் CS3யில் செய்யப்படுபவை. எனவே உங்களிடம் சிஸ் 3 இருந்தால் நல்லது. இல்லையென்றால் எந்த வெர்சனாக இருந்தாலும் பிரச்சினையில்லை. உங்களுக்கு பிளாஷ் கற்றுக் கொள்ள ஆர்வமிருந்து உங்களிடம் ஃபிளாஷ் மென்பொருள் இல்லையென்றால் இதோ
இங்கே(112mb) கிளிக் செய்து அடோப் சிஸ் 3 ஐ டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். இது ஒரு போர்டபிள் மென்பொருள். எனவே இன்ஸ்டால் செய்ய தேவையில்லை. மேலும் தயார் செய்த மூவிக்களை பார்க்க அடோப் பிளாஷ் பிளேயர் தேவை எனவே அதை இங்கே கிளிக் செய்து டவுன்லோட் செய்துகொள்ளவும்.
முதல் பதிவில் ஃபிளாஷில் கிழமை, தேதி வருடத்தை எப்படி உருவாக்குவது என பார்ப்போம்.முதலில் அடோப் பிளாஷ் சிஎஸ் 3ஐ திறக்கவும். அதில் Create New என்பதில் Flash File (ActionScript 2.0) என்பதை கிளிக் செய்யவும்.இப்படி ஒரு விண்டோ திறக்கும்
அதில் Text Toolஐ கிளிக் செய்து வெள்ளை விண்டோவில் சதுரம்போல் இழுத்து விடவும். அது இப்படி இருக்கும்.
பிறகு அதில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் செட்டிங்குகளை அமைக்கவும். 1. Dynamic Text 2. Font உங்களுக்கு விருப்பமானதை தேர்ந்தெடுக்கலாம்.3. Var: என்ற இடத்தில் theDate என்று டைப் செய்யவும்.4. உங்களுக்கு விருப்பமான நிறம், ஃபோண்ட் சைஸ் போன்றவற்றை கொடுக்கலாம்.அதை தேர்ந்தெடுத்துக் கொண்டு, F8ஐ அழுத்தி அதை சிம்பலாக கன்வர்ட் செய்யவும். அதில் Movie Clip என்பதை தேர்ந்தெடுக்கவும். இல்லையென்றால் Modify என்பதில் convert to symbol என்பதை கிளிக் செய்து Movie Clipஐ கிளிக் செய்யவும்.பிறகு நடுவில் நீங்கள் இழுத்து விட்ட செவ்வகத்தை ரைட் கிளிக் செய்து Actions என்பதை தேர்ந்தெடுக்கவும். அங்கே உள்ள காலியிடத்தில் கீழ்காணும் ஆக்சன்ஸ்கிரிப்டை பேஸ்ட் செய்யவும்.
onClipEvent (load){
weekdays = ["Sunday","Monday","Tuesday",
"Wednesday","Thursday","Friday","Saturday"];
months = ["Jan","Feb","Mar","Apr","May","Jun","Jul",
"Aug", "Sep", "Oct","Nov","Dec"];
}
onClipEvent (enterFrame){
myDate = new Date();
tDay = weekdays[myDate.getDay()];
tMonth = months[myDate.getMonth()];
tDate = myDate.getDate();
tYear = myDate.getFullYear();
theDate = tDay+", "+ tMonth+" "+tDate+", "+tYear;
}
பிறகு உங்கள் மூவியை பார்க்க Control+Enterஐ கிளிக் செய்யவும்.பிறகு இதை சேமிக்க File என்பதில் Export என்பதை கிளிக் செய்து Export to movie என்பதை கிளிக் செய்து swf ஃபைலாக சேமிக்கவும்.இதை தமிழில் செய்ய Font என்பதில் Latha என்பதை தேர்ந்தெடுக்கவும். கீழ்காணும் ஆக்சன்ஸ்கிரிப்டை பேஸ்ட் செய்யவும்.
onClipEvent (load){weekdays = ["ஞாயிறு","திங்கள்","செவ்வாய்","புதன்","வியாழன்","வெள்ளி","சனி"];months = ["ஜனவரி","பிப்ரவரி","மார்ச்","ஏப்ரல்","மே","ஜூன்","ஜூலை","ஆகஸ்டு", "செப்டம்பர்", "அக்டோபர்","நவம்பர்","டிசம்பர்"];}onClipEvent (enterFrame){myDate = new Date();tDay = weekdays[myDate.getDay()];tMonth = months[myDate.getMonth()];tDate = myDate.getDate();tYear = myDate.getFullYear();theDate = tDay+", "+ tMonth+" "+tDate+", "+tYear;}
நன்றி
எஸ் . கே அண்ணாவுக்கு
தொடரும்