பக்கங்கள்

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

மூன்றாம் திருவிழா - உந்தன் அருள் வேண்டும்தா முருகா







நல்லைக் கந்தன் ஆலய மகோற்சவ காலப் பதிவுகளில் இன்று நல்லை முருகன் பாடல் ஒன்று ஒலியிலும், எழுத்திலுமாக வருகின்றது.

பாடலாசிரியர்: தாயகக் கவி புதுவை இரத்தினதுரைஇசை வழங்கியவர்: இசைவாணர் கண்ணன்பாடலைப் பாடுகின்றார்: இசைக்கலைமணி ஸ்ரீ

வர்ணராமேஸ்வரன்.
தேரடியில் காலையிலே நானழுத வேளையிலே
நீ திரும்பிப் பார்க்கவில்லை முருகா - உன்
காலடியில் நான் இருந்து கண் சொரிந்த போதினிலே
கண்டு மனமிரங்கவில்லை முருகா
கண் திறந்து பார்க்க வில்லை முருகா - என்னை
கண்டு மனமிரங்கவில்லை முருகா
நல்லை நகர் வீதியிலே நாளும் சென்று அழுபவர்க்கு
தொல்லை அற்று போகுமென்றார் முருகா - நான்
வெள்ளை மணல் மீதுருண்டு வேலவனே என்றழுதேன்
துள்ளி வந்து சேரலையே முருகா
வேரிழந்து கண்களிலே நீர் சொரிந்த வேளையிலே
வேறிடத்தில் நீ ஒளித்தாய் முருகா - நீ
ஏறி வந்த தேர் இருக்கு, இழுத்து வந்த வடம் இருக்கு
எங்கேயடா போய் ஒளித்தாய் முருகா
செந்தமிழால் வந்த குலம் நின்று களமாடுகையில்
உந்தன் அருள் வேண்டுமடா முருகா - நீ
வந்திருந்து பூச்சொரிந்தால் வாசலிலே கையசைத்தால்
வல்ல புலி வெல்லுமடா முருகா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக