பக்கங்கள்

வியாழன், 10 பிப்ரவரி, 2011

என் தேசம் , என் தந்தை , என் தாய்
என் சகோதரர் , என் சொந்தம் , என் சுற்றம் - எல்லாமே
அன்று என் வாழ்வில் வசந்தம்

குருதி தோய்ந்த தேசத்தில் வாழ்ந்த எனக்கு
குளிர் உறையும் தேசத்தில் வாழும் போதுநடுக்கம்
ஆனாலும் என் தேசம் எனக்கென்றும் நேசம்

அன்றைய பொழுதையும் இன்றைய பொழுதையும்
நினைக்கும் போது மனதினில் என்றும் இறுக்கம்
உறக்கம் தொலைத்து உடல் வலித்து உயிராகிய
என் தேசத்தை தொலைத்து தேடுவதாய்
எனக்குள் ஒரு சோகம் ,,,,,

உரிமைக்காய் போராடுகின்றோம் என்று
சொன்னவர் எல்லாம் தமது
உரிமையையும் இழந்து பிறர் உரிமையையும்
பறித்து கொடுத்ததுவாய் இன்றைய நம் வாழ்வு ...,

உரிமையின் பெயரால் எல்லாவற்றையும் இழந்தோம்
என் வாழ்விலும் மூ பத்துடன் இரு ஆண்டுகள் இதுதான்
இனிவரும் அகவையில் அக மகிழ்வேன் என்றபடி
பிற தேசம் வாழும் என் தேச நேசத்தவைளை
கரம் பிடித்த ஓராண்டுடன் ஓடோடி அவள் கரம் பற்ற
ஆகாயப்பருந்தில் ஆனந்தமாய் பயணப்பட்டேன் ...

என்னை வழி அனுப்பிடவே என் உடன் பிறந்தவள் தன் மகனோடும்
சோதரன் தன் குடும்பமுமாய் வந்தென்னை விமான புரியிலே
நா தள தளக்க பேசாமடந்தை போலும் விழி இரண்டில்
முத்து துளிகளை சிந்தியபடி என் மாமா தான் ப்ளேன் ஏறி
தனக்கு ஒரு ப்ளேன் வாங்கி வருவார் என்ற நம்பிக்கையுடன்
கன்னத்திலே முத்தமிட்டு கைகாட்டி விழியோரம் பார்த்து நிற்க
கூடவந்த சுற்றங்களும் என் வாழ்வு சிறக்கும்படி அகமகிழ்ந்து
வழி அனுப்பி வைத்தனராம் - தம் விழி கரைத்து

லங்கா விமானத்திலே இருந்து இழந்த என் மனதை
இழைத்து இழைத்து தேடுகின்றேன் ...,
இலங்காபுரியை விட்டு இமயபுரியின் மேலாய்
இடம் தேடி அலைபவன் போல் இடரோடு என்பயணம் ..

மேலே பறக்க பறக்க என் இதயம் கீழ்
நோக்கியதாய் துடி துடித்தது
ஒருநாளில் என்பயணம் மறுதேசம் கண்டது
இடை இடையே என் உள்ளத்தில் etppadda காய கீறல்களும்
உள்ளத்தின் வடுக்களும் கண்நீரைப்போலதுமாய்
நதி மலை பள்ளத்தாக்குகளும் மாறி மாறி பூமிப்பந்தின்
வர்ண ஜாலங்களும் என் விழி விம்பத்தில் கருக்கொண்டது ..

மெது மெதுவாய் ஆகாயப்பேருந்து இரைதேடிய
பருந்தினை போல அசைந்தாடி இலண்டன் மாநகரின்
அழகினை அணைத்தபடி கீட்ருவை நோக்கி முத்தமிட்டது

தொடரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக