அன்னையாய் தன் உருவம் எடுத்து
ஆராரோ சொல்லி எமை வளர்த்து -உளம் குளிர்ந்து தன்
இரு தோலில் கை தாங்கி எமை சுமந்து
ஈழ நாட்டின் பெருமைகளை கதைகளாய் கோர்த்து எமக்கு
உவகை கொண்டு எம்மை வளர்த்து எடுத்த தாயவளை
ஊராரும் உலகோரும் கைகொட்டி சிரிக்கும் படி - தனிமரமாய் தவிக்கவிட்டு
எல்லோர் முன்னாலும் தாய் மீது பாசமென நாடகமும் ஆடிவிட்டு
ஏளனமாய் நடக்கும் கூட்டம் தான் குத்தாட்டம் இங்கு போடுகுதாம் - இதை
ஐங்கரா நீ சொல்லு எப்போது மாறும் இந்த மானிடனின் ஆட்டம்
ஒருநாள் நீயும் தாய் மனதில் இடம் கொண்டாய் மாம்பழமும் வாங்கிக் கொண்டாய்
ஓர் வார்த்தை சொல்லிவிடு கலியுகம் வாழும் மானிடர்க்கு தாயினை நீ ஒருநாளில் நேசிப்பதா அன்னையர் தினம் - உனக்கு அவையெல்லாம் வெறும் நகைச்சுவை போல் உனக்கு நாள் பார்த்து தாய் மீது பாசம் கொள்ள இதுவெல்லாம் நீ விரும்பும் ஒரு பொருள் அல்ல , உன்னை பாரினிலே புதுப் பிறவியாய் உருவம் கொடுத்த தெய்வமாய் தினம் போற்று அதுவே நீ உன் தாய்க்கு செய்யும் உண்மை அன்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக