பக்கங்கள்

வியாழன், 19 ஆகஸ்ட், 2010

ஐந்தாம் திருவிழா - கந்தா தமிழன் துயர் தீர்க்க ஓடிவா



பொதுவாக சினிமா பாடல்களில் தான் பொப்இசைப் பாடல்கள் வருவது உண்டு ஆனாலும் பக்தி பாடல்கள் பொப் இசையில் பக்திப் பாடல்கள் பாடப்படுவது குறைவென்றே சொல்ல முடியும் . அந்த வகையில் இலங்கையின் பொப் இசை சக்கரவர்த்தி என்று எல்லோராலும்
போற்றப்படும் திரு . மனோகர் அவர்கள் சினிமா பாடல்களை மட்டும் அல்லாது ஒரு சில பக்திப்படல்களையும் பாடியுள்ளார் கந்தனை பாடுவதற்கோ அல்லதுபிற தெய்வங்களை பாடிடவோ இந்த மெட்டில்தான் பாட வேண்டும் என்ற முறை என்பது இல்லை நாம் எந்த முறையில் பாடினாலும் இறவன் மீது முழு பற்றுக்கொண்டு மனம் கசிந்துருகப் பாடும் போது இறைவன் அந்த அந்த இசைவடிவத்தில் நம் கண் முன்னே தோன்றுவான் . இவ்வாறு நல்லூர் கந்தன் மீது திரு . மனோகர் அவர்களால் திரு . அரவிந்தன் இசை அமைக்க பாடப்பட்ட இந்த பாடலை உங்கள் முன் சேர்க்க ஆசைப்படுகிறேன் . கந்தன் அருள் நமக்கு கிடைக்கட்டும் . நாளைய ஆறாம் நாள் திருவிழாவில் மீண்டும் சந்திக்கிறேன் .
மால் மருகா எழில் வேல் முருகா நீயே
மால் முருகா எழில் வேல்முருகா நீயே
ஆவலுடன் உன்னைத் தேடி வந்தேனே
முருகா வடிவேலா...........தருவாய்
அருள் குமரா.....முருகா வடிவேலா.......தருவாய் அருள் குமரா......
நல்லூர் நாயகனே....! நல்வழி காட்டுமைய்யா
நம்பிய பேர்களது துன்பங்களைத் தீருமய்யா
நல்லூர் நாயகனே....! நல்வழி காட்டுமைய்யா
நம்பிய பேர்களது துன்பங்களைத் தீருமய்யா
நல்லூர் எம்பதியேநம்பிக்கையின் ஒளியேநல்லூர்
எம்பதியேநம்பிக்கையின் ஒளியே
கனிமலைக் கந்தவேளே காப்பது நீயய்யா
கதியே நீயென்றால் பதியே சரணமய்யா
கனிமலைக் கந்தவேளே காப்பது நீயய்யா
கதியே நீயென்றால் பதியே சரனமஅய்யா
கந்தா கதிவேலா...வருவாய் சிவபாலா....
கந்தா கதிவேலா...வருவாய் சிவபாலா....
ஏழுமலை இறையினிலே எழுந்திடும் குமரேசா
ஆறுதலைத் தந்திடுவாய் ஆறுமுகா அழகேசா
ஏழுமலைப் இறையினிலே எழுந்திடும் குமரேசா
ஆறுதலைத் தந்திடுவாய் ஆறுமுகா
குமரா எழில் முருகா......குறுகுறு நகை அழகா......குமரா எழில் முருகா........குறுகுறு நகை அழகா........
ஆறாம் நாள் திருவிழாவில் சந்திப்போம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக